Monday, 5 August 2013

My FavouRite RoMaNtiC SonG 01

 மாலை நேரம், மழை தூறும் காலம், என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்...
நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன்.
ஓடும் காலங்கள், உடன் ஓடும் நினைவுகள், வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே...
இது தான் வாழ்க்கையா? ஒரு துணை தான் தேவையா? மனம் ஏனோ என்னையே கேட்கிறதே...
ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது, கவிதை ஒன்று முடிந்தது, தேடும் போதே தொலைந்தது அன்பே...
இது சோகம், ஆனால் ஒரு சுகம்.
நெஞ்சின் உள்ளே பரவிடும். நாம் பழகிய காலம் பரவசம் அன்பே...
இதம் தருமே...

உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம்
பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது...
கனவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது.
ஒரு காலையில் நீ இல்லை, தேடவும் மனம் வரவில்லை.

விடிந்ததும் புரிந்தது, நான் என்னை இழந்தேனென...
ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது, கவிதை ஒன்று முடிந்தது, தேடும் போதே தொலைந்தது அன்பே...
இது சோகம், ஆனால் ஒரு சுகம். நெஞ்சின் உள்ளே பரவிடும். நாம் பழகிய காலம் பரவசம் அன்பே... இதம் தருமே...

ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன...

நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன...

இரு மனம் சேர்கையில் பிழைகள் பொறுத்துக்கொண்டாள் என்ன...

இரு திசை பறவைகள் இணைந்து விண்ணில் சென்றால் என்ன...
என் தேடல்கள் நீயில்லை, உன் கனவுகள் நானில்லை, இரு விழி பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன...