இங்கு சேர்ந்து/இணைந்து வாழும் வாழ்க்கை வாழ விரும்புகின்ற பலருக்கு என்னுடைய
சில யோசனைகள்/அறிவுரைகள்:
(1) உங்கள்
இருவருக்குள்ளும் எப்பொழுதும் நான் என்னும் அகங்காரத்தை (ego) விட்டிருக்க வேண்டும். சிறு சிறு ஊடல்கள் நல்லது. ஆனால் அந்த
ஊடல்கள் கூடல்களில் முடிவதே நலம். பலரது வாழ்வில் சிறு சிறு ஊடல்கள் பெரிய விரிசல்களையே
உண்டாக்குகின்றன.
(2)
“கடவுளே, என் எதிரியை
நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை என் நண்பர்களிடம் இருந்து காப்பாற்று.” இது
அனைவரது காதல் வாழ்விலும் பொருந்தும். உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும்
உங்கள் நண்பர்களிடம் யோசனைகள் கேட்காதீர்கள். உங்களுக்கு யோசனைகள் வழங்கக் கூடிய
ஒரே நபர் உங்கள் துணைவரே என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆருயிர் நண்பர்களை
விட உங்கள் துணைவரே மேலானவர் என்பதை மனதில் இருத்துங்கள். இது உங்கள்
இருவருக்குமான வாக்குத்தத்தம்.
நன்றி நண்பர்களே.
No comments:
Post a Comment