கடுகல் பகுதி -1
இந்த கதை, என் வாழ்க்கைல நடந்த
ஒரு சின்ன அத்தியாயம். இந்த கதைய பத்தி சொல்லனும்னா இது ஒரு காதல் கதை. இதுல
சந்தோஷத்தை விட அழுகையும் சண்டையும் தான் அதிகமா இருக்கும். சண்டைனதும் நடு
ரோட்டுல கட்டிபொரண்டு போடுற சண்டை இல்லைங்க. இது வேற மாதிரிங்க. அட என்னை பத்தி நான்
இன்னும் சொல்லவே இல்லேல! பொறுங்க சொல்றேன். என்னோட பேரு ஆனந்த். நான், ஒரு முனைவர் பட்டத்திற்கு
முயன்று கொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர். அந்த ஒரே ஒரு பட்டத்திற்கு தாங்க டிரை (try) பண்றேன், குடுக்க
மாட்டேங்கிறாங்க. என்ன பண்றதுன்னு தெரியலைங்க, அட ஆராய்ச்சில தானுங்க... எப்படியோ என்னோட
கைடு (Guide) கால்ல கைல விழுந்து
அடுத்த வாரம் என்னோட சினாப்சிஸ் (synopsis) சப்மிட் (submit) பண்ண போறேன். அதனால
கொஞ்சம் கேப்பியா (happy-a) இருக்கேன். இது தாங்க என்னை பத்தின
பெரிய அப்பீசியல் இன்றோடக்சன் (official introduction). என்னை பத்தின பெர்சனல்னு பார்த்தா நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன். இதை
மறச்சு, நான் இன்னும் திரைமறைவு வாழ்க்கை தாங்க வாழ்றேன். என்ன பண்றது, நம்ம
சமுதாயம் அப்படி...
நான் இப்போ ஒருத்தரை
என்னோட உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். அவனும் என்னை காதலிக்கிறான். அவன் பேரு
சாமீ. அவன் என்னை விட ரெண்டு வயசு மூத்தவன். அவன் வெர்சடைல் (versatile), நான் பாட்டம் (bottom). நானும் அவனும் ஒரு குரூப் செக்ஸ்ல தான் மொதமொத சந்திச்சோம்.
எனக்கு அவனை பிடிச்சது. அவனுக்கு என்னை பிடிச்சது. ஒரு மாசம் கழிச்சு ஒரு நாள்
அவன் வண்டீல ஒரு பாலத்துல போகும் போது அவன் பீல் (feel) பண்ணி என்கிட்ட ப்ரபோஸ் (propose) பண்ணான். எனக்கு அவனை ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ப பிடிக்கும்.
அதனால நான் ஓகே சொல்லிட்டேன். வாழ்க்கை சில காலம் சந்தோசமா போச்சு. பல காலம்
சங்கடங்களும் இருந்துச்சு. ஏதோ இப்போ தொடங்கின மாதிரி தான் இருக்கு. ஆனா நாட்கள் வேகமா ஓடிருச்சு. கிட்டத்தட்ட
நாங்க சந்திச்சி எங்க வாழ்கைய தொடங்கி நாலே கால் வருஷமாச்சு. போன ஒரு வருஷமா அவங்க
வீட்ல அவனுக்கு பொண்ணு பாக்குறாங்க. அவனுக்கு பொண்ணு பாக்கிற விஷயத்தை மொத மொத
அவங்க அம்மா எங்கிட்ட சொன்னப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சி. ஆனா எந்த
பொண்ணும் செட் (set) ஆகல. அது எனக்கு
சந்தோஷமா இருந்துச்சி. அவனும் அதை பத்தி கவலை படல. அட நான் ப்ளேடு போட்டது
போதும்னு நினைக்கிறேன். நீங்க கதைய படிக்க ஆரம்பிங்க.
கடுகல் பகுதி -2
நாள்: ஜூன் 11; நேரம்: நண்பகல் 12 மணி;
ஆனந்த்:
|
“ஹாய் டா என்ன பண்ற?”
|
சாமீ:
|
“நான் ஆபீஸ்ல தான் டா இருக்கேன். சொல்லு நீ என்ன பண்ற?”
|
ஆனந்த்:
|
“நான் இங்க காலேஜ்ல சும்மா தான் இருக்கேன். நான் எதுக்கு கால் பண்ணேனா இந்த மண்த் எண்டு (month end) அம்மா எங்கயாவது டூர் போலாம்னு சொல்றாங்க. கன்னியாகுமரி
போலாம்னு நினைக்கிறேன். டிரெயின்ல (Train) அவைலபிளிட்டி (availability) செக் பண்ணேன். டிக்கெட் இருக்கு. நீயும் எங்க
கூட வரியான்னு கேக்கதான் கால் பண்ணேன். நீ என்ன சொல்ற சாமீ”
|
சாமீ:
|
““ஓ... ம்ம்ம்... இல்ல உன் தங்கச்சிலாம் வருது. அதான்
யோசிக்கிறேன். நான் கண்டிப்பா வரணுமா?”
|
ஆனந்த்:
|
“அதெல்லாம் ஒரு ப்ரோப்ளமும் இல்ல. நீ தான் நான் உன்னை விட்டுட்டு ராமேஸ்வரம்
போனேன்னு கோவிச்சுக்கிட்ட. அதான் இந்த முறை உன்னை கேக்குறேன். உன்னோட இஷ்டம்.
நான் டிக்கெட் புக் பண்ணபோறேன். நீ ஊன்னு ஒரு வார்த்தை சொல்லு. உனக்கும்
சேர்த்து புக் பண்ணிடுறேன்.”
|
சாமீ:
|
“ம்ம்ம் ஓகே
டா. டிக்கெட் புக் பண்ணிடு.”
|
ஆனந்த்:
|
“ஓகே டா. பை பை (Bye Bye)”
|
சாமீ:
|
“பை பை”
|
கடுகல் பகுதி -3
நாள்: ஜூன் 11; நேரம்: இரவு 8 மணி;
ஆனந்த்:
|
“ஹாய் டா என்ன பண்ற?”
|
சாமி:
|
“இப்ப தாண்ட வீட்டுக்கு வந்தேன். நீ எங்க இருக்க”
|
ஆனந்த்:
|
“நானும் இப்ப தாண்ட வீட்டுக்கு வந்தேன். டிக்கெட் புக் பண்ணிட்டேன். சோ நீ
கண்டிப்பா வர்ற. ஓகே வா...”
|
சாமி:
|
“சரிடா. கண்டிப்பா நான் வர்றேன்டா. அம்மா என்னை
சட்னி அரைக்க கூப்பிடுறாங்க. நான் போயிட்டு வந்து கூப்பிடுறேன். ஓகே வா.”
|
ஆனந்த்:
|
“ம்ம்ம் ஓகே டா. வேலையெல்லாம் முடிச்சிட்டு என்னை கூப்பிடு.”
|
சாமி:
|
“ஓகே டா. பை”
|
ஆனந்த்:
|
“பை பை”
|
கடுகல் பகுதி -4
நாள்: ஜூன் 11; நேரம்: இரவு 10.30 மணி;
சாமி:
|
“ஹாய் என்ன
பண்ற?”
|
ஆனந்த்:
|
“சும்மா தான்டா
இருக்கேன். சாப்டாச்சா? ”
|
சாமி:
|
“இப்போ
தாண்டா தோசை சாப்டேன். நீ சாப்டியா?”
|
ஆனந்த்:
|
“ம்ம்ம். நான் எட்டரை மணிக்கே பிரைடு ரைஸ் (fried rice) சாப்டுட்டேன்”
|
சாமி:
|
“சரி.
அம்மாட்ட பேசுனியா? நான் வர்றதப் பத்தி
அம்மா எதுவும் சொல்லல?”
|
ஆனந்த்:
|
“அதெல்லாம் ஒன்னும் சொல்லல. சொல்லவும் மாட்டாங்க. (கோபத்துடன்) வான்னா வர வேண்டியது தானே. எதுக்கு இவ்ளோ கேள்வி”
|
சாமி:
|
“வர்றேன். வர்றேன்.
கோப படாத டா. மணி பதினொன்னாகப் போகுது. அப்பா கதவடைக்கிறதுக்காக நிக்குறாரு.
நான் உள்ள போறேன். நீ தூங்கு. சரியா.”
|
ஆனந்த்:
|
“ம்ம்ம் சரிடா. சவுண்ட் குறைச்சிட்டியா? ”
|
சாமீ:
|
“ம்ம்ம் குறைச்சிட்டேன். சொல்லு. ”
|
ஆனந்த்:
|
“குட் நைட்.”
|
சாமீ:
|
“குட் நைட். ”
|
ஆனந்த்:
|
“ஸ்வீட் டிரீம்ஸ்.”
|
சாமீ:
|
“ஸ்வீட்
டிரீம்ஸ்.”
|
ஆனந்த்:
|
“ஐ லவ் யூ.”
|
சாமீ:
|
“மீ டூ டா. பை
டா.”
|
ரொம்ப மகிழ்ச்சி அவிட்.....
ReplyDeleteநிஜமாகவே உங்கள் வாழ்க்கை நிறைய கரடு முரடான பாதையில் பயணித்ததை நான் அறிவேன்... அந்த நிகழ்வுகள், எழுத்து வடிவங்களாக உருமாறி இருப்பதில் நிறைவாக இருக்கிறது....
இதுவரை என் வலைப்பதிவுகள் பெரும்பாலானவை உங்கள் மதிப்பாய்வுக்கு பிறகே அச்சேறுவது வழக்கமாக இருந்தது... அந்த வகையில் இதுநாள்வரை ஒரு மிகச்சிறந்த விமர்சகராக உங்களை நான் அறிவேன்... ஒரு எழுத்தாளனாக உங்கள் அவதாரம் என்னை நிஜமாகவே பெருமையடைய வைக்கிறது....
வாழ்த்தும், நன்றியும் சொல்லி உங்களை நான் பிரித்துப்பார்க்க விரும்பல.... ஆனாலும், அந்த வார்த்தைகளில் மட்டுமே இப்போதைக்கு எனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்....
நன்றியும், வாழ்த்தும் உங்கள் முதல் அத்தியாயத்தின் எனது காணிக்கை மலர்கள்....
தங்களது வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி திரு. விஜய் விக்கி. நான் ஒரு நல்ல விமர்சகர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நல்ல எழுத்தாளனா என்பதை இந்த கதை முடிந்த பின் நீங்கள் தான் கூற வேண்டும்.
Deleteநான் நன்றி தெரிவிக்கும் போது மட்டும் "அடி விழும்" என்று கூறும் தங்களது நன்றியினை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆதலால் தங்களது வாழ்த்துக்களும் ஊக்கங்களும் மட்டுமே வேண்டும் என்பதை தெரிவித்துக்கொண்டு, தங்களது நன்றியினை வாபஸ் வாங்கிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் "கொலை விழும்" என்பதை மிகத்தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.
Good job Avid.. Expecting more from you... தானைத் தலைவன் wild fanatasyக்கு இன்னும் விஷயம் தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கறேன்... தெரிஞ்சிருந்தா உங்கள வாட்ஸ்அப்ல வாட்டி வதக்கியிருப்பான்... Lol.. :D
ReplyDeleteநன்றி திரு. ரோத்தீஸ் ஜி. திரு. ஒயில்டு ஃபன்டஸி அவர்கள் என்னை வாட்ஸ்அப்ல வந்து அப்பு அப்பு அப்பினாலும் பரவாயில்லை ஜீ. அவருக்கு பற்பல நன்றிகள்.
Deleteஅவிட் நீங்க ஒரு எழுத்தாலர் நு சொல்லவே இல்ல . உண்மையா ரொம்ப சந்தோசமா இருக்கு.வலை பூ ல மெசேஜ் பண்ணும் போதும் கூட சொல்லவே இல்ல. ஈகேர்லி வெயிட் டு ஹியர் யுவர் லவ் ஸ்டோரி. என்னோட மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி திரு. பாலா. நான் இப்போ தாங்க எழுதவே ஆரம்பிக்கிறேன். இது தாங்க முதல் கதை.
ReplyDeleteNice starting my friend! Eagrly waiting for next part!
ReplyDeleteThanks Mr. Candy Man for your wishes...
DeleteSollavey Illa ????? ( Naan Kadhai Yeluthuratha sonnean pa) k k carry on ................ Romba nalla irukku
ReplyDeleteநன்றி திரு. சுந்தர்ராஜ். ஊரப் பார்த்து கண்டுபிடிச்சிட்டேன் நீங்க யாருன்னு...
DeleteStory is nice dear
ReplyDeletevaazthukkal
நன்றி திரு. அஜய் குமார் நைஜீரியா...
Deleteரொம்ப நல்லாருக்கு...வாழ்த்துக்கள்...sharing makes a lot relief nd give energy to us...so you are doing good job... waiting for the next
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி திரு. சாம்ராம். இங்க சொல்ல போற விஷயம், காதல்ல இருக்கிற பல பேருக்கு உதவும்னு நினைச்சு தான் சொல்றேன்.
Delete