கடுகல் பகுதி -5
இப்படித்தாங்க நானும்
சாமீயும் தினமும் குறைஞ்சது ஒரு நாலு தடவையாவது பேசிக்குவோம். ராத்திரி மட்டும்
கொஞ்சம் அதிக நேரம் பேசிக்குவோம். சில பல சமயம், ஒரு மணி நேரம் கூட பேசிக்குவோம். இங்க
வாசகர்களாகிய உங்களோட பொறுமை கருதி நான் தேவையானத மட்டும் சொல்லிருக்கேன்.
ஒவ்வொரு நாளும் நான்
இந்த டூர் (tour) பத்தி பிளான் பண்ணேன்.
ஏன்னா அவனுக்கு இது ஒரு மறக்க முடியாத எக்ஸ்பிரியன்ஸா (experience) இருக்கணும்னு ஆசைப்பட்டேன். இதுவரை நானும் சாமீயும்
அவனோட பிரன்ஸ்சோடவும் (friends) அவங்க வீட்டோடவும் டூர் போயிருக்கோம். எங்க வீட்டோட போறது இது தான் பஸ்ட் (first) டைம். ஆன்லைன்லயே ரூம்
புக் பண்ணேன் அப்புறம் என்னோட காலேஜ் பிரண்டு மூலமா ஊர் சுத்துறதுக்கு டாக்ஸி அர்ரேஞ் (arrange) பண்ணேன். நான் ஏற்கனவே மூணு தடவை கன்னியாகுமரி
போயிருக்கேன். அதனால அங்க என்ன என்ன பார்க்கலாம்னு எனக்கு ஓரளவுக்கு தெரியும்.
இருந்தாலும் நெட்ல சர்ச் (search) பண்ணி பிளான் பண்ணேன். அட அந்த டூர் பிளான் என்னனு தானே கேக்குறீங்க. உங்க
மைண்டு வாய்ஸ் கேக்குது...
கடுகல் பகுதி -6
நாள்: ஜூன் 27; நேரம்: இரவு 10.00 மணி;
சாமீ:
|
ஹாய் டா,
என்ன பண்ற?
|
ஆனந்த்:
|
நான் சும்மா தான்டா
இருக்கேன். சாப்டாச்சா?
|
சாமீ:
|
ம்ம்ம் சாப்டேண்டா. இன்னைக்கு இட்லி. நீ என்ன சாப்ட?
|
ஆனந்த்:
|
அப்பயே சாப்டேன்.
பிரைடு ரைஸ்.
|
சாமீ:
|
எப்ப
பார்த்தாலும் இந்த பிரைடு ரைஸ் தானா?
|
ஆனந்த்:
|
நான் என்ன பண்றது இந்த
ஏரியாவுல இது தான் நல்லாருக்கு.
|
சாமீ:
|
ம்ம்ம். எப்படியோ தின்னா சரி. ஆமாண்டா நாம கன்னியாகுமரி எப்ப கிளம்புறோம்?
|
ஆனந்த்:
|
ஹப்ப்பா... இப்பவாவது
கேக்கணும்னு தோணுச்சே... நானும் நீயா இதப்பத்தி கேப்ப கேப்பனு இருந்தேன்.
|
சாமீ:
|
நான் கேக்கலேன்னா என்னடா? நீயா சொல்லவேண்டியது தானே.
|
ஆனந்த்:
|
ஏன் நீ கேட்டா?
|
சாமீ:
|
ஏன் நீ
சொன்னா?
|
ஆனந்த்:
|
நீ கேட்டா, என்ன குறைஞ்சிடுவ?
|
சாமீ:
|
ஏன் நீ
சொன்னா, என்ன குறைஞ்சிடுவ?
|
ஆனந்த்:
|
அதெல்லாம் நீ கேட்காம
சொல்ல முடியாது.
|
சாமீ:
|
அய்யோ
அப்ப்பா ஆள விடு. இப்பவாவது சொல்லு... நான் தான் இப்போ கேட்டேன்ல...
|
ஆனந்த்:
|
வெள்ளிக்கிழமை
மத்தியானம் 3 மணிக்கு இங்க இருந்து கிளம்புறோம். நேரா எங்க வீட்டுக்கு போறோம்.
சாப்டுறோம். தூங்குறோம். அப்புறம் சனிக்கிழமை ராத்திரி ஒரு மணிக்கு ரயில்வே
ஸ்டேஷன்கு கிளம்புறோம். அங்க போய் ரெண்டு மணிக்கு டிரெயின். டிரெயின் காலைல
நாகர்கோவில் போகுது. அங்க இருந்து டாக்ஸில கன்னியாகுமரி போயிட்டு நம்ம
குளிச்சிட்டு கிளம்பி போய் ஒவ்வொரு இடமா பார்க்குறோம். ஃபஸ்ட் டே (first day) அங்க பத்மநாபபுரம் பேலஸ், தொட்டி பாலம், திற்பரப்பு
பால்ஸ், வட்டக்கோட்டை இதெல்லாம் பார்க்கிறோம். செகண்ட் டே அங்க பேவாட்ச்னு ஒரு
தீம் பார்க் இருக்கு அதுக்கு போறோம். அதுக்கப்புறம் ஈவனிங் பீச்கு போறோம்.
அப்பறம் நைட் டின்னர் முடிச்சிட்டு நாம கிளம்ப வேண்டியது தான். கிளம்பும் போது
டிரெயின் கன்யாகுமரில இருந்து புக் பண்ணிருக்கேன். ஆனா எங்க ஊர் வரைக்கும் தான்.
அதுக்கப்புறம் அம்மாவையும் தங்கச்சியையும் விட்டுட்டு நாம இங்க பஸ்ல
வந்துடுறோம். ஓகே வா. ஏதாவது டவுட் இருக்கா?
|
சாமீ:
|
ஏன்டா அங்க
கோயில் தானடா பேமஸ்? அதுவே இதுல இல்ல.
|
ஆனந்த்:
|
நீ கோயில்கு வருவியா?
இல்லைல. அப்பறம் என்ன.
|
சாமீ:
|
அதனால
என்னடா, நான் வெளிய நிக்குறேன்டா. நீங்க
மட்டும் போயிட்டு வாங்க.
|
ஆனந்த்:
|
அதெல்லாம் ஒன்னும்
தேவையில்ல.
|
சாமீ:
|
ஏய்
அம்மாலாம் வராங்கல்லடா. கோயிலுக்கு போகாம எப்படி?
|
ஆனந்த்:
|
எங்க அம்மாவே
வேண்டான்டாங்க. போதுமா?
|
சாமீ:
|
(ஆச்சர்யத்துடன்) ஏண்டா?
|
ஆனந்த்:
|
(கோபத்துடன்) கண்டிப்பா சொல்லியே
ஆகணுமா... அங்க பயங்கர கூட்டமா
இருக்கும். அதனால தான். போதுமா...
|
சாமீ:
|
சரிடா. நான்
தூங்க போறேன். சரியா...
|
ஆனந்த்:
|
ம்ம்ம் சரிடா.
|
சாமீ:
|
(சில நொடி
மௌனத்திற்கு பின்: (அதாவது அவன் குட் நைட் சொல்லுவான்னு நானும், நான்
சொல்லுவேன்னு அவனும் காத்திருந்திட்டு)) ம்ம்ம் சொல்ல்ல்லு.
|
ஆனந்த்:
|
ஏன் நீ சொன்னா?
|
சாமீ:
|
(மெல்லிய
குரலில்) அம்மா இருக்காங்கடா...
|
ஆனந்த்:
|
ஒஹ்ஹ்.... சரி....
குட் நைட்.
|
சாமீ:
|
குட் நைட்.
|
ஆனந்த்:
|
“ஸ்வீட் டிரீம்ஸ்.”
|
சாமீ:
|
“ஸ்வீட்
டிரீம்ஸ்.”
|
ஆனந்த்:
|
“ஐ லவ் யூ.”
|
சாமீ:
|
“மீ டூ டா. பை
டா.”
|
ஆனந்த்:
|
பை டா.
|
கடுகல் பகுதி -7
வெள்ளிக்கிழமை மதியம் என் காலேஜ்ல இருந்து
கிளம்பி சரியா மூணு மணிக்கு நான் பஸ் ஸ்டாண்டு வந்திட்டு
அவனுக்கு கால் பண்ணேன். கால் கட் பண்ணி விட்டான். பக்கத்துல இருந்த காம்ப்ளக்ஸ்ல
அம்மாவுக்கு ஷாப்பிங் பண்ணிட்டு இருந்தேன். கரக்டா நான் ஷாப்பிங்
முடிக்கிற சமயம் சாமீ கால் பண்ணான்.
சாமீ:
|
எங்கடா இருக்க?
|
ஆனந்த்:
|
ஷாப்பிங் மால்'ல இருக்கேண்டா...
|
சாமீ:
|
ஷாப்பிங் முடிச்சிட்டியா?
|
ஆனந்த்:
|
ம்ம்ம் முடிச்சிட்டேன்டா.
|
சாமீ:
|
சரி அப்போ நீ வெளிய வந்துடுறா. நானும் வந்துர்றேன்.
|
ஆனந்த்:
|
சரி டா. ஜஸ்ட் டூ
மினிட்ஸ். வந்துடுறேன்
ஓகே வா.
|
சாமீ:
|
ஓகே டா.
|
கடுகல் பகுதி -8
நான் ஷாப்பிங் முடிச்சிட்டு வெளிய வந்தேன்.
அவனும் அவன் பிரண்டு பிரசாத்தும் நின்னுட்டு இருந்தானுங்க. நான் போலாமா சாமீ’னு
கேட்டேன். அவன் உடனே என்கிட்ட “போலாம்டா”னு சொல்லிட்டு, பிரசாத் கிட்ட திரும்பி “சரிடா நான் கிளம்புறேன்”னு சொல்லிட்டு என் கூட கிளம்பினான்.
நான் ஏன் இந்த பிரசாத்கு ஒரு பை கூட சொல்லலன்னு நீங்கள்லாம் யோசிக்கலாம். அதுக்கு
காரணம் நான் அவன்கிட்ட சண்டை. ஸ்சோ பேச மாட்டேன். இப்போ புரியுதா. அது ஏன்னு
தெரிஞ்சுகிடுற ஆர்வம் அதிகமாயிடுச்சா?
பிரகாஷும் ஒரு கே. அதுவும் பாட்டம் வேற. அவங்க
ரெண்டு பேருக்குள்ள எதுவும் கிடையாதுன்னு சொல்லுவான். ஆனா பிரசாத்கு சாமீ’னா
உயிர். அவங்க ரெண்டு பேரோட பிரண்ட்ஷிப் பார்த்தா யாருக்கும் கண்டிப்பா சந்தேகம்
வரும். எனக்கும் சாமீக்கும் அடிக்கடி சண்டை வர்றதே அந்த பிரசாத்'தால தான். சாமீ’க்கு
இப்படி ஒரு பிரண்டு இருக்கான்றதே எனக்கு ஒரு ஒன்றை வருஷம் தெரியாது. அதுக்கப்பறம்
தான் தெரியும். அதுக்கப்பறம் எங்க போனாலும் அவனும் கூட தான் வருவான். தியேட்டர்கு
போனாலும் வருவான். துணிக்கடைக்கு போனாலும் வருவான். சாமீ வீட்டுக்கு போனாலும்
அங்கயும் உட்காந்திருப்பான். நானும் சாமீயும் தனியா மீட் பண்ண விடவே மாட்டான்.
எங்க போனாலும் பல்லி மாதிரி ஒட்டிகிட்டே தான் இருப்பான். அவன் வச்சது தான் சட்டம்.
ஒரு ஸ்டேஜ்ல நான் உன்னை அவனுக்கே விட்டு கொடுத்திட்டு போறேன் சாமீ’னு சொல்ற
அளவுக்கு அவனால எங்களுக்குள்ள சண்டையெல்லாம் வந்திருக்கு. இன்னும் சில சமயங்கள்ல
ஒன்னு நானா இல்ல அவனானு முடிவு பண்ணு’னு சொல்லிருக்கேன். அப்பவும் சாமீ சொல்ற ஒரே
செண்டென்ஸ்: “அவன் என் பிரண்டுடா. அவனுக்கு என்னை விட்டா யாரும் இல்லை. நீயும்
அவனும் வேற வேற. புரிஞ்சுக்கோ. புரிஞ்சுக்கோ. புரிஞ்சுக்கோ”. ஆனா அந்த பிரசாத் சொல்ற ஒரே விஷயம்: அவனுக்கு நீ
அந்த நாலு சுவத்துக்குள்ள மட்டும் தான் அப்படி. அதை விட்டுட்டு வெளில வந்தா நீயும்
பிரண்டு தான் நானும் பிரண்டு தான்”. இப்போ புரிஞ்சிருக்கும்
நான் ஏன் இவனை இவ்ளோ வெறுக்குரேன்னு. சாமீ அவன் இல்லாம எங்கயும் வரமாட்டான். சில
சமயம் அந்த பிரசாத் வெளியூர் போயிருக்கும் போது மட்டும் தான், அவன் இல்லாம சாமீ
கூட சில சமயம் படத்துக்கு போயிருக்கேன். அப்படி போனா ஒரு ரெண்டு நாள்ல சாமீ’ய வேற
படத்துக்கு நான் இல்லாம கண்டிப்பா கூட்டிட்டு போயிடுவான். அவன் இல்லாம போற முதல்
டூர் இது தான்.
நீங்க சொல்லும்விதம் cut shots மாதிரி இருக்கு...superb....
ReplyDeleteநன்றி திரு. சாம்ராம்...
Delete