கடுகல் பகுதி -9
நாள்: ஜூன் 29; நேரம்: மதியம் 3.00 மணி
பஸ் ஸ்டாண்டுக்குள்ள போயி மதுரைக்கு 1 டு 1 பஸ்ல ஏறினோம். ரெண்டு பேர் உக்காருற சீட்ல அவன் ஜன்னல் பக்கத்துல, நான் அதுக்கு அடுத்து இருக்குற சீட்ல உட்கார்ந்தோம். ஜன்னல் பக்கத்துல அவன பார்க்கும் போது எனக்கு "எங்கள் அண்ணா" படத்துல வர்ற ஒரு பாட்டு தான் ஞாபகம் வந்துச்சு. அது என்ன பாட்டுனா:
"முதல் முதலாக ஜன்னல் ஓரத்தில்
நிலாவை நான் கண்டேன்.
சில்லென்று என்னை தீண்டி சென்றிடும்
மேகத்தை நான் பார்த்தேன்.
மௌனங்களால் எனை நீ தாக்கினாய்.
மோகங்களால் எனை கைதாக்கினாய்.
இது நியாயம் தானா சொல்லு கண்ணே..."
சில நிமிஷங்கள்ல பஸ் கிளம்புச்சு. நான் அவன் கூட ரெண்டு நாள் இருக்க போறேன்றதே எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. அவனோட தோள்ள சாஞ்சுகிட்டேன். அதுவே எனக்கு ஒரு மிகப் பெரிய சுகத்தை கொடுத்தது. நான் அவனோட தோள்ள சாஞ்சு தூங்கினேன். அவன் தூங்கவே இல்ல. 5.15 மணிக்கு மதுரைக்கு வந்தோம். அங்க இருந்து எங்க ஊருக்கு பஸ் ஏறினோம். சரியா 6.30க்கு எங்க ஊருக்கு போய்டோம். உடனே அம்மாவுக்கு போன் பண்ணி வந்துட்டோம்’னு சொன்னேன். அடுத்த அஞ்சு நிமிஷத்துல எங்க வீட்டு வாசல்ல நின்னோம்.
கடுகல் பகுதி -10
நாள்: ஜூன் 29; நேரம்: மாலை 6.30 மணி
சாமீ எங்க வீட்டுக்கு இதுக்கு முன்னாடியே ஒரு தடவை வந்திருக்கான். எங்க அம்மா அப்பறம் என் தங்கச்சி ரெண்டு பேரையுமே நல்லா தெரியும். அவங்களும் சாமீ வீட்டுக்கு வந்திருக்காங்க. கதவை தட்டின உடனே அம்மா தான் வந்து கதவ தொறந்தாங்க. அவன "வாய்யா"ன்னு கூப்பிட்டாங்க. சோபாவுல உட்கார்ந்திருந்த என் தங்கச்சி நாங்க வந்தவுடனே எந்திருச்சி ரூமுக்குள்ள போயிருச்சி. அத போயிருச்சினு சொல்ல கூடாது, ஓடிருச்சினு தான் சொல்லணும். பயத்துல ஓடிருச்சினு நினைக்காதிங்க, அவளுக்கும் பயத்துக்கும் சம்பந்தமே கிடையாது. யாரு வந்தாலும் உள்ள போயிறணும்னு, அம்மா மெரட்டி வச்சிருக்கிறதால ஓடிருச்சி. அம்மா அவன “சோபால உட்காருயா’னு சொல்லி அவங்க சேர்ல உட்கார்ந்தாங்க. சாமீகிட்ட பாத்ரூம் போறியான்னு கேட்டேன். ஆனா அவன் "நான் போலடா"ன்னு சொல்லிட்டான். சரின்னு சொல்லிட்டு நான் மட்டும் பாத்ரூம் போயி ரெப்ரெஷ் ஆகிட்டு வந்தேன். அதுக்குள்ள அம்மா அவன்கிட்ட அவனோட நலத்தையும் அவங்க அம்மா நலத்தையும் விசாரிச்சு முடிச்சிருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் டீ.வீ பார்க்க ஆரம்பிச்சோம். எனக்கு டீ.வீ-ல தமிழ் ஹிந்தி சாங்க்ஸ் அப்புறம் இங்கிலீஷ் மூவீஸ் பார்க்க பிடிக்கும். சாமீக்கு சீரியல் தான் பிடிக்கும். ஆனா எங்க ரெண்டு பேருக்கும் பார்க்க பிடிச்ச சேனல் கார்டூன் நெட்வொர்க் அப்புறம் போகோ தான். சோ ரெண்டு பேரும் "சோட்டா பீம்" பார்த்தோம். ஒரு அரை மணி நேரத்துக்கு அப்புறம் நான் கிச்சனுக்கு போய் அம்மா கிட்ட "சாப்பாடு ரெடியா"னு கேட்டேன். அதுக்கு அம்மா "சாதம் ரெடிய்யா. ரசமும் ரெடிய்யா. குழம்பு வாங்கிட்டு வந்தேனா உடனே சாப்ட்ரலாம்"னு சொன்னாங்க. சாதமும் ரசமும் வீட்ல செஞ்சிட்டு குழம்பு வெளில வாங்கி சாப்டுடலாம்னு பிளான். இந்த பிளான்ன சொன்னதே நான் தான். ஏன்னா அம்மா செய்ற சமையல்ல உரைப்பு ரொம்ப கம்மியா இருக்கும். ஆனா அவன் நல்லா உரைப்பா சாப்பிட்டு பழகுனவன். அதனால தான் இந்த பிளான்.
கடுகல் பகுதி -11
நாள்: ஜூன் 29; நேரம்: இரவு 7.30 மணி
நான் என்னோட தங்கச்சியோட ஸ்கூட்டில சாமீ’ய கூட்டீட்டு ஹோட்டலுக்கு போனேன். ஹோட்டலுக்கு வர்ற வழில ஒவ்வொரு பசங்களையும் கலாய்க்கிறது கண் அடிக்கிறதுன்னு பண்ணிட்டு வந்தான். அவனோட ஊர்ல நாங்க ரெண்டு பேரும் அவனோட பைக்ல போனாலும் என்னோட ஸ்கூட்டில போனாலும் இது மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டே தான் வருவான். இதெல்லாம் அவனோட ஊர்ல வேணா சகஜம். ஆனா எங்க ஊர்லலாம் இப்படி பழக்கமே கிடையாது. அப்புறம் எங்க ஊர்ல சுத்தி முத்தி சொந்தகாரங்களும் தெரிஞ்சவங்களும் தான் இருப்பாங்க. அவங்க என்ன நினைப்பாங்கன்னு எனக்கு பயம். அவன அடக்குறதுவே எனக்கு பெரிய கஷ்டமா போச்சு. கடைசில திட்டி தான் அடக்கினேன். ஒரு வழியா ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன். நாட்டு கோழி சிக்கன் கிரேவி ஒன்னு அப்புறம் மட்டன் சுக்கா ஒன்னு வாங்கிகிட்டேன். ஏன்னா சாமீக்கு சிக்கன் அவ்வளவா பிடிக்காது. மட்டன் தான் பிடிக்கும். வேற ஏதும் வேணுமான்னு கேட்டேன். "ஐயோ இது போதும்பா"னு சொன்னான். அப்போ தான் சாருக்கு ஞாபகம் வந்துச்சு... சாரி... சாரி... ஞானோதயம் வந்துச்சி. அதாவது ஒருத்தர் வீட்டுக்கு வந்தா ஏதாவது வாங்கிட்டு வரணுமேன்னு. உடனே என் கிட்ட ஸ்வீட்ஸ் வாங்கனும்னு சொன்னான். சரி வாங்கலாம்னு சொல்லிட்டு நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். வீட்டுக்கிட்ட வந்ததும் அவன் என்னை "நான் தான் உன்கிட்ட அவ்ளோ சொன்னேன்லடா"னு திட்டினான். "எங்க ஊர்ல ஸ்வீட்ஸ்லாம் நல்லாவே இருக்காது. அப்புறம் அம்மாவுக்கு சுகர். சோ அவங்க சாப்பிடமாட்டாங்க. ரெண்டு நாள் ஊருக்கு வேற போறோம். சோ டோடல் வேஸ்ட். அதனால தான் வாங்கல"ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள வந்துட்டேன்.
கடுகல் பகுதி -12
நாள்: ஜூன் 29; நேரம்: இரவு 8.00 மணி
அம்மா எனக்கும் சாமீக்கும் சாதம் எடுத்து வச்சாங்க. முதல்ல நாட்டு கோழி சிக்கன் கிரேவி ஊத்தி மட்டன் சுக்கா வச்சி சாப்பிட்டோம். அம்மா அவன் கிட்ட சொன்னாங்க "நல்லா சாப்பிடுய்யா. சாப்பிடுறதுக்கு தான் இருக்கோம்"னு. எனக்கு சிரிப்பு வந்துருச்சி. ஏன்னா அவனுக்கு என் தங்கச்சி முதல் தடவை எங்க வீட்டுக்கு வந்தப்ப வச்ச பேரே "அண்டா". அதாவது அவன் அண்டா மாதிரி இருக்கானாம். ஆனா எனக்கு ஏனோ அவன் கரெக்டா இருக்கிற மாதிரி தான் தெரியும். அவன் தடியா இருக்கிறதால ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே என்னையும் தடிக்க சொல்லி கம்பெல் பண்ணான். நம்பளுக்கு பிடிச்சவங்க சொல்லி செய்யாம இருப்போமா... இப்போ நானும் தடியா தான் இருக்கேன். நான் சிரிச்ச உடனே சாமீ என்ன பாத்து மொரைச்சான். அப்பறம் அம்மா அவனுக்கு சாதம் வச்சாங்க. மறுபடியும் சிக்கன் கிரேவி ஊத்திக்க சொல்லி நான் கம்பெல் பண்ணினேன். அவன் போதும்னு எவ்ளோவோ சொன்னான். நான் விடவே இல்லை. அவன அன்னிக்கி நெறையா சாப்டவச்சேன்.
going nice
ReplyDeleteThanks for yoUr comments Mr. Ajay...
Deletevery few have chance like this...நமக்கு பிடித்தவரை வீட்டுக்கு கூப்பிட்டு வந்து அதுவும் சாப்பிட வைப்பதும்...very happy to read...
ReplyDeleteநமக்கு பிடித்தவர்களுடன் சாப்பிடுவதே ஒரு ஆனந்தம் தான். அதிலும் நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்து சாப்பிட வக்கிறது, திரும்ப கிடைக்குமான்னு தெரியல... நன்றி திரு. சாம்ராம்...
Delete