Thursday, 15 May 2014

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) பகுதி 28 - 31

கடுகல் பகுதி - 28
            சாமீ அடுத்த நாள் காலைல வந்துட்டான். வழக்கம் போல தினமும் பேசிட்டு இருந்தோம். ஒரு மிகப்பெரிய பூகம்பம் புதன் கிழமை தான் வெடிச்சது...

நாள்: ஜூலை 11;              நேரம்: இரவு 10.30 மணி

சாமீ:
உன்கிட்ட மதியமே சொல்லனும்னு நினைச்சேன். மறந்துட்டேன்டா...
ஆனந்த்:
சரி, இப்போ சொல்லு...
சாமீ:
அன்னிக்கு பொண்ணு பார்க்க போனோம்ல, அவங்க வீட்ல இருந்து நாளைக்கு நம்ம வீட்ட பார்க்க வர்றாங்களாம்...
ஆனந்த்:
ஒஹ்ஹ்... அப்போ கல்யாணம் ஃபிக்ஸ்டா...
சாமீ:
இல்லடா... இது சும்மா ஒரு சம்பிரதாயம்... நாம அவங்க வீட்ட போய் பார்த்தோம்ல... அவங்க நம்ம வீட்ட பார்க்க வருவாங்க...  
ஆனந்த்:
ம்ம்ம்...
சாமீ:
நீ என்ன பண்ற, நாளைக்கு ஒரு ஆறு மணிக்கெல்லாம் இங்க வந்திடு... சரியா...
ஆனந்த்:
ம்ம்ம்... சரிடா...
சாமீ:
அப்பறம் வேறென்ன?
ஆனந்த்:
ஒண்ணும்மில்லைடா... தூங்க வேண்டியது தான்...
சாமீ:
சரி... நல்ல பிள்ளையா படுத்தொறங்கு...
ஆனந்த்:
ம்ம்ம்ம்...
சாமீ:
குட் நைட்...
ஆனந்த்:
குட் நைட்...
சாமீ:
ஸ்வீட் டிரீம்ஸ்...
ஆனந்த்:
ஸ்வீட் டிரீம்ஸ்...
சாமீ:
ம்ம்ம்... சொல்லு...
ஆனந்த்:
ஐ லவ் யூ டா...
சாமீ:
மீ டூ டா...
ஆனந்த்:
பை... பை...


கடுகல் பகுதி – 29
நாள்: ஜூலை 12;              நேரம்: மாலை 5 மணி

நான் அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பணும்னு பிளான் பண்ணேன். ஆனா என்னோட கைடு கரெக்ட்டா அந்த டைம்க்கு கூப்பிட்டு அல்லக்கை வேலை கொடுத்துட்டாரு... அப்பறம் என்ன பண்றது... அந்த அல்லக்கை வேலைய முடிச்சிட்டு, என்னோட ஜூனியர்கிட்ட மட்டும் சொல்லிட்டு ஆறு மணிக்கு எஸ்கேப்பாகிட்டேன்... வர்றதுக்கு லேட் ஆகிடுச்சுன்னு சொல்றதுக்காக, வண்டி ஓட்டிக்கிட்டே சாமீக்கு கால் பண்ணேன்... கால் வெய்யிடிங்லயே போச்சு... திரும்பவும் ஒரு 5 நிமிஷத்துல கால் பண்ணேன்... ரிங் போச்சு... ஆனா, எடுக்கவே இல்ல...  சரி வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்...

நாள்: ஜூலை 12;              நேரம்: மாலை 6.45 மணி

சாமீ வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே, பிரசாத் தான் வெறாண்டால  உட்கார்ந்து நல்லா பஜ்ஜி சொஜ்ஜி சாப்டுட்டு இருந்தான்.
அம்மா :
என்ன ஆனந்து, இவ்ளோ லேட்டு...
பெரியக்கா :
என்னடா... எல்லாரும் வந்துட்டு போனதுக்கப்புறம் வர்ற?
அப்பா :
ஏம்மா, அவன் காலேஜ் போற பையன்... நினைச்ச நேரத்துக்கு வர முடியுமா?
பெரிய மாமா :
வாங்க ஆனந்து... எப்படி இருக்கீங்க?
ஆனந்த்:
நல்லாருக்கேன் மாமா... நீங்க எப்படி இருக்கீங்க மாமா...
பெரிய மாமா :
நல்லாருக்கேன் ஆனந்து... உனக்கு இந்த வருஷத்தோட படிப்பு முடியுதுல...
ஆனந்த்:
ஆமா மாமா... இன்னும் ஒரு மூணு மாசத்துல முடிஞ்சிரும் மாமா...
பெரிய மாமா  :
அதுக்கப்பறம் எங்க வெளிநாடு தானா?
ஆனந்த்:
ஆமா மாமா... அப்ப தான கொஞ்சமாச்சும் சம்பாதிக்க முடியும்...
பெரிய மாமா  :
வேல கெடைச்சிருச்சா?
ஆனந்த்:
இன்னும் இல்லை மாமா. ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன் மாமா...
பெரியக்கா :
வெளிநாட்டுக்கெல்லாம் போயிட்டேனா எங்கல மறந்துடாத ஆனந்து...
சாமீ:
அதேல்லாம் மறக்க மாட்டான்... என்னடா நான் சொல்றது கரெக்ட் தானே... (அவ்ளோ நேரம் அங்க இல்லாத சாமீ அப்போ தான் அங்க வந்தான். நானே அவன் குரல் கேட்டு தான் திரும்பினேன்... அவன் பின்னாடியே ஒரு பெரிய நண்டூ’ஸ் கூட்டமே வந்தது...)
ஆனந்த்:
ம்ம்ம்... கரெக்ட் தான்... நிச்சயம் மறக்க மாட்டேன்கா...
பெரியக்கா :
பார்ப்போம்... நான் இங்க தானே இருப்பேன்...
அப்பா :
ஆனந்துக்கு பஜ்ஜி, கேசரியெல்லாம் எடுத்துக்கொடுங்கம்மா... 
பெரியக்கா :
எனக்கு ரொம்ப அலுப்பாயிருக்குப்பா... காலைல இருந்து வேலை பார்த்தேன்ல... ஏய், நான்சி... போய் ஆனந்த் மாமாக்கு எடுத்திட்டு வாம்மா...
நான்சி:
என்னம்மா, சும்மா சும்மா என்னையவே வேலை வாங்குறீங்க...
பெரியக்கா :
டேய் சாமு, நீ போய் எடுத்திட்டு வாடா...
சாம்:
போங்கம்மா...

அக்கா, நானே போய் எடுத்துக்கிறேங்கா...
டீனா:
நீங்க இருங்க மாமா... நான் போய் எடுத்திட்டு வர்றேன்...
(சின்னக்காவோட நாலு வயசுப் பொண்ணு தான் இந்த  டீனா. எனக்கும் டீனாவுக்கும் அப்படி ஒரு லிங்க். அவளுக்கு பெஸ்ட் ஃபிரெண்ட் யாருன்னு கேட்டா, என் பேரை தான் சொல்லுவா... ஏன்னா அவ சாமீ வீட்டுக்கு வந்தா, அவ கூட விளையாடுறது, அவளை தூக்கிக்கிட்டே அலையரது, அவ கேக்குறத வாங்கி கொடுக்குறதுன்னு எல்லாமே நான் தான்.)
பெரியக்கா :
பார்த்தீங்களா... ஆனந்துக்குன்னா இந்த பிள்ளை ஓடுறதப்பாருங்க...
சின்னக்கா :
(கிட்சன்ல இருந்து வெளில வந்த சின்னக்கா) பஜ்ஜி காலியாகிடுச்சு... கடைசியா இருந்தத தான் பிரசாத்கு வச்சேன்... கேசரி தான் இருக்கு...
பெரியக்கா :
சரி பரவால... கேசரிய எடுத்திட்டு வா...
சாமீ:
அவனுக்கு இனிப்பு தான் பிடிக்கும்... நிறைய போட்டு கொடுப்பா... (கேசரிய வாங்கிட்டேன்... என் பக்கத்துல இருந்த சேர்ல வந்து சாமீ உட்கார்ந்தான்...
ஆனந்த்:
பார்த்திட்டு போனாங்கள்ள... என்ன சொன்னாங்க?
சாமீ:
ஆங்... எல்லோருக்கும் பிடிச்சிப்போச்சிடா... அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க... நாங்களும் ஓகே சொல்லிட்டோம்... எல்லாருக்கும் திருப்தி தான்...
ஆனந்த்:
ம்ம்ம்... அப்போ எப்ப நிச்சயதார்த்தம்?
சாமீ:
ஆங்... அதுக்குள்ளயுமா நிச்சயதார்த்தம்? அதுக்கெல்லாம் நாளாகும்டா...
ஆனந்த்:
ம்ம்ம்...
சாமீ:
சரி, நீ போயி மாமாவ பஸ் ஸ்டாண்டுல மட்டும் ட்ராப் பண்ணிட்டு வர்றியா? காலைல இருந்து வீட சுத்தம் பண்ணினேனா... எனக்கு ரொம்ப அலுப்பாருக்குடா...
ஆனந்த்:
ம்ம்ம்... சரிடா... அக்கா போகல...
சாமீ:
இல்லடா... நாளைக்கு காலைல டிரெயின்ல போயிடுவாங்க. (மாமாகிட்ட) மாமா, உங்கள ஆனந்த் கொண்டு வந்து விடுறான்... 

நான் பெரிய மாமாவ கூட்டிட்டு போய் பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு வந்தேன்... அப்பறம் அன்னைக்கு நைட் அவங்க வீட்ல சாப்டுட்டு கிளம்பினேன்... பொண்ணு வீட்ல ஓகே சொல்லிட்டாங்க அப்படிங்கிறது எனக்கு ஏதோ ஒரு உறுத்தலா தான் இருந்தது... வீட்டுக்கு வந்ததும், அவனுக்கு ஃபோன்  பண்ணி பேசினேன். வீட்ல அக்காங்க இருந்ததால அவன் அவ்வளவா பேசல... நான் தூங்கிட்டேன்...
கடுகல் பகுதி30
நாள்: ஜூலை 13;              நேரம்: இரவு 10.00 மணி
நான் சாமீக்கு மதியம் 3 மணிக்கு ஃபோன் பண்ணேன். அவன் ஃபோன் எடுக்கவே இல்ல. திரும்பவும் 6 மணிக்கு ஃபோன் பண்ணேன். ஃபோன் கட் பண்ணி விட்டான். திரும்பவும் ஒரு 9 மணிக்கு ஃபோன் பண்ணேன். மறுபடியும் கட் பண்ணி விட்டான். திரும்ப ஒரு  10 மணிக்கு ஃபோன் பண்ணேன். மறுபடியும் கட் பண்ணி விட்டான். நான் திரும்பவும் ஒரு நாலஞ்சு தடவ ஃபோன் பண்ணேன்.
ஆனந்த்:
என்ன ஃபோனயே காணோம்... பிஸியா....
சாமீ:
ம்ம்ம்... ஆமாம் டா... நான் உனக்கு அப்பறம் ஃபோன் பண்றேன்டா...
“நான் சரிடா”னு கூட சொல்லல, அதுக்குள்ள ஃபோன் கால்ல கட் பண்ணிட்டான். எனக்கு புரியவே இல்ல. என்ன ரீசன்’னு. நான் 1 மணி வரைக்கும் ஃபோன்காக வெயிட் பண்ணிப்பார்த்தேன். ஃபோன் வரலன்னு, அதுக்கப்புறம் தூங்கிட்டேன்.
கடுகல் பகுதி31
நாள்: ஜூலை 14;              நேரம்: 10.00 மணி
என்னோட மொபைல் “உன்னை நானறிவேன், என்னையன்றி யாரறிவார்”னு பாடுச்சு...
ஆனந்த்:
ஹாய் டா, குட் மார்னிங்.
சாமீ:
ஹாய் டா, குட் மார்னிங். என்ன முழிச்சிட்டியா?
ஆனந்த்:
முழிச்சிட்டேன்டா...
சாமீ:
பெரியக்கா வறாங்கடா, டிரெயின் ஏறிட்டாங்க... நீ என்ன பண்ணு, கரக்டா 11 மணிக்கு ரெயில்வே ஸ்டேஷன்கு போய் அக்காவ கூட்டிட்டு வந்திடு... எனக்கு ஆபீஸ்ல ஒரு சின்ன வொர்க் இருக்கு. நான் 12 மணிக்கு வந்திடுறேன்டா.
ஆனந்த்:
ம்ம்ம்... சரிடா...
சாமீ:
ஓகே டா... பை...
நேத்து ஃபோன கூட எடுக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன பிஸி, நேத்து காலைல ஊருக்கு போன அக்கா அதுக்குள்ள எதுக்கு வருது? இப்படி நிறைய கேள்வி, கேக்குறதுக்கு இருந்தாலும் நான் அரைகுறை தூக்கத்துல இருந்ததால எதுவும் கேக்கல. அதுக்கப்புறம் எழுந்திரிச்சி, ஒரு வழியா கிளம்பி 11 மணிக்கெல்லாம் ரெயில்வே ஸ்டேஷன் போய்ட்டேன். டிரெயின் அதுவரைக்கும் வர்ல. அதனால, பெரியக்காவுக்கு கால் பண்ணினேன்.

ஆனந்த்:
அக்கா, நான் ஆனந்த் பேசறேன்கா...
பெரியக்கா:
சொல்லு ஆனந்த். அங்க தான் வந்துட்டுருக்கேன்.
ஆனந்த்:
தெரியும்கா. நான் இங்க ஸ்டேஷன்ல தான்கா இருக்கேன். இன்னும் எவ்ளோ நேரத்துலக்கா டிரெயின் வரும்.
பெரியக்கா:
இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்ல வந்துடும் ஆனந்து. சாமீ வரல்லையா...
ஆனந்த்:
அவனுக்கு ஆபீஸ்ல வேலை இருக்குன்னு சொன்னான்கா. 12 மணிக்கு வீட்டுக்கு வந்திடுறேன்னு சொன்னான்க...
பெரியக்கா:
சரி ஆனந்து... நான் ஸ்டேஷன்ல இறங்கிட்டு கூப்பிடுறேன்...
ஆனந்த்:
சரிக்கா...
டிரெயின்ல வந்த பெரியக்காவையும் அவங்க ரெண்டு குட்டீசையும் என்னோட வண்டில ஏத்திக்கிட்டு சாமீ வீட்டுக்கு போனேன். போகும் போது தான் அவங்க அக்கா விஷயத்தை சொன்னாங்க...
ஆனந்த்:
என்னக்கா நேத்து தான் ஊருக்கு போனீங்க, அம்மா வீடு உங்கள மறுபடியும் கவர்ந்து இழுத்திருச்சா?
பெரியக்கா:
அட, நீ வேற ஏண்டா... உன்கிட்ட சாமீ ஒண்ணுமே சொல்லலியா?
ஆனந்த்:
இல்லியேக்கா? என்ன விஷயம்கா?
பெரியக்கா:
நிஜமாவே தெரியாதா? அவனுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம்... அவன் உன்கிட்ட ஒன்னுமே சொல்லலியா?
ஆனந்த்:
இல்லைக்கா... ஒண்ணுமே சொல்லல... நான் அவன்கிட்ட கேட்டப்போ அதுக்கெல்லாம் நாளாகும்னு தான் சொன்னான்கா. இதை பத்தி நான் அவன்கிட்ட பேசிக்கிறேன். நாளைக்கின்னு எப்பக்கா முடிவு பண்ணாங்க?
பெரியக்கா:
நேத்து காலைல தான் ஆனந்து. திங்க கிழமை ஆடி மாசம் பொறக்கிறதால, அதுக்கு முன்னாடியே நிச்சயம் பண்ணனும்னு பொண்ணு வீட்ல அவசர படுத்தினதால தான் நாளைக்கே நிச்சயதார்த்தம்... அவன் வேலை பிஸில மறந்திருப்பான். இத ஒன்னும் பெருசு பண்ணாத...
ஆனந்த்:
ம்ம்ம்... சரிக்கா...
சாமீ, அவனுக்கு நிச்சயதார்த்தம்ங்கிறத மறைச்சது எனக்கு என்னமோ மாதிரி இருந்தது. 

4 comments:

  1. இன்று காலை முதலே மனசு வருத்தத்தில் இருக்கு.... இந்த பகுதி அந்த வருத்தத்தை இன்னும் அதிகமாக்கிடுச்சு.... இனி "காதல் தவிர்க்கும்" படலம் நிறைய இருக்குன்னு நினைத்தாலே டர்ர் ஆகுது... குட்டி குட்டி விஷயங்கள் ரசிக்கும்படியா இருக்கு... சாமி வீட்டில் ஆனந்தை அணுகும் முறை எதார்த்தமா இருக்குறதால, மனசுல பஜக்குன்னு ஒட்டிகிச்சு.... படிச்சு முடிச்ச்சதே தெரியல, சர்ருன்னு ஓடிடுச்சு... அடுத்த வியாழனை எதிர்நோக்கி....

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. விஜய் விக்கி.

      Delete
  2. atlast that moment came...hmm the every one like us had to face this...உங்களின் எதார்த்த பேச்சு நடை ரொம்ப நல்லாருக்கு...சாமி மேல் கோபம் வருகிறது...ஏன் மறைக்கணும்...அவரே சொல்லிருக்கணும்...உங்களிடம் சொல்ல சங்கடமா ?...waiting for the next

    ReplyDelete
    Replies
    1. இந்த கதை முடியும் பொழுது சாமீ'யை கொலை செய்யவே தோன்றும்... அவன் செஞ்ச சேட்டை கொஞ்ச நஞ்சம் அல்ல... அடுத்தடுத்த பகுதிகளில் நீங்களே புரிந்து கொள்வீர்கள்...

      Delete