Thursday, 1 May 2014

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) பகுதி 24 - 27



 கடுகல் பகுதி - 24
எனக்கு ஒரே சந்தோஷம். ஏன்னா, அப்பாம்மா ஊருக்கு போயிட்டா, சாமீ மட்டும் தானே இருப்பான். அதுவும் என் கூட மட்டும் தானே இருப்பான். சோ ஈவ்னிங் எங்கயாவது படத்துக்கு போலாம்னு ப்ளான் பண்ணினேன். பஸ் ஸ்டாண்டுகிட்ட போனதும் வண்டிய ஸ்லோ பண்ணினான். நான் கிட்ட போனதும், வண்டிய அங்க இருந்த பழக்கடைக்கிட்ட நிப்பாட்ட சொல்லி சிக்னல் காமிச்சான். நானும் அவனும் அங்கயே வண்டிய நிப்பாட்டிட்டு எல்லோரும் அந்த பழக்கடைக்குள்ள போனோம்.

சாமீ:
ஆப்பிள் ஒரு அரை கிலோ, சாத்துக்குடி ஒரு அரை கிலோ, அப்பறம் திராட்சை ஒரு அரை கிலோ வாங்கறேன்மா. போதுமாம்மா?
சாமீயோட அம்மா:
வாழைப்பழம் வாங்கிடு சாமீ
சாமீ:
ம்ம்ம்... சரிம்மா... ரஸ்தாளி வாங்கவா, இல்ல பூவன் பழம் வாங்கவாம்மா...
சாமீயோட அம்மா:
ரஸ்தாளியே வாங்கிடு சாமீ...
சாமீ:
ம்ம்ம்... சரிமா...
சாமீயோட அம்மா:
சாமீ, பூ வாங்கணும்டா...
சாமீ:
வாணி வாங்கிடுறேன்னு சொல்லிருக்குமா...
சாமீயோட அம்மா:
அப்ப சரி...
இவ்ளோ பழம் வாங்கும் போது கூட எனக்கு எதுவுமே தோணல. அப்பறம் பூ பத்தி பேசும் போது தான் எனக்கு விஷயமே புரிஞ்சது. அதாவது அவங்க அப்பாம்மா, இவனுக்கு பொண்ணு பார்க்கத் தான் போறாங்கண்ணு. முன்னாடியெல்லாம் அவனுக்கு பொண்ணு பார்க்கப் போறாங்கண்ணு கேள்விப்பட்டா, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா இப்பல்லாம், நோ ஃபீலிங்ஸ். ஏன்னா, இதுக்கு முன்னாடி கிட்டத்தட்ட ஆறேழு பொண்ணு பார்த்துட்டு ஒண்ணு இவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க, இல்லனா அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. பத்தோட பதிணொன்னு அத்தோட இது ஒண்ணுனு ஆகிடுச்சு. அதனால நோ ஃபீலிங்ஸ் (no feelings). பழம் வாங்கிட்டு அவங்க அப்பாம்மாவ, ப்ரைவேட் (private) பஸ்ஸா பார்த்து ஏத்தி விட்டோம். ஏன்னா, சின்னக்கா ஊருக்கு ப்ரைவேட் பஸ் தான் ரொம்ப வேகமா ஒர்மண் நேரத்துல போகும்.

கடுகல் பகுதி - 25
அப்பாம்மாவ பஸ் ஏத்தி விட்டுட்டு வீட்டுக்கு வந்தோம்.
சாமீ:
சாப்பிடுறியா...
ஆனந்த்:
ம்ம்ம் சாப்டலாம்டா...
ப்ளேட்ல தோசை எடுத்து போட்டுகிட்டு, அம்மா வச்சிட்டு போயிருந்த தேங்கா சட்னி, காரச்சட்னி ரெண்டையும் எடுத்துக்கிட்டு வந்து ஹால்ல இருந்த டீவிய ஆன் பண்ணிட்டு சாப்பிட உட்கார்ந்தோம்.
சாமீ:
அப்பாவும் அம்மாவும் எனக்கு பொண்ணு பார்க்க தான் சின்னக்கா ஊருக்கு போறாங்கடா...
ஆனந்த்:
ம்ம்ம்... தெரியும்டா...
சாமீ:
எப்பிடி தெரியும்? அம்மா சொன்னாங்களா?
ஆனந்த்:
இல்ல நீங்க பேசினதுல இருந்தே தெரிஞ்சது.
சாமீ:
ம்ம்ம்... இன்னைக்கு வீட்டை க்ளீன் பண்ணனும்டா. நெறைய ஒட்டடை சேர்ந்துடுச்சி.
ஆனந்த்:
ம்ம்ம்... பண்ணு பண்ணு...
சாமீ:
பண்ணு பண்ணுனா... சாப்பாடெல்லாம் போட்ருகேன்ல... நீயும் சேர்ந்து தான் பண்ணனும்.
ஆனந்த்:
சேர்ந்து தானே... பண்ணுவோம்... பண்ணுவோம்...
சாமீ:
டேய்ய்ய்ய்...
ஆனந்த்:
யேய்.... நான் எதுவும் தப்பாலாம் சொல்லல. முதல்ல சாப்ட்டு முடி...
சாப்ட்டு முடிச்சதும், எல்லா பாத்திரத்தையும் அவன் கழுவினான், சாப்ட இடத்தை நான் க்ளீன் (clean) பண்ணினேன். வீட்டை க்ளீன் பண்றேன்னு முதல்ல ஜன்னல்ல தொடச்சான். எல்லா ஜன்னல்ல இருந்த ஸ்க்ரீன் க்லாத்தயும் (screen cloth) கலட்டிட்டு தொவக்கிறதுக்கு ஊற வக்கிறதுக்காக மாடிக்கு எடுத்திட்டு போனான். ஒரு பத்து நிமிஷத்துல அவனோட மொபைல் அடிச்சது. எடுத்துப் பார்த்தேன். அவங்க சின்ன அக்கா தான் ஃபோன் (phone) பண்ணது. சரினு ஃபோன எடுத்திட்டு மாடிக்கு படியேறினேன்.
ஆனந்த்:
ஏய் சாமீ, சின்னக்கா ஃபோன் அடிக்கிறாங்கடா.
சாமீ:
குடுடா. அம்மா வீட்டுக்கு போயிருப்பாங்கன்னு நினைக்குறேன்டா...
ஆனந்த்:
ம்ம்ம். சரி... இந்தா ஃபோனு... நான் கீழ இருக்கேன்டா...
அவங்க அக்காகிட்ட பேசிட்டு கீழ வந்தான்.
சாமீ:
சின்னக்கா என்னையும் கூப்பிடுதுடா. பொண்ணு வீட்டுக்காரங்க கையோட என்னையும் பார்க்கணும்னு சொல்றாங்களாம்.
ஆனந்த்:
ம்ம்ம்... சரி கிளம்புடா... எத்தனை மணிக்கு போகணும்.
சாமீ:
ஃபங்ஷன் 5 மணிக்கு தான். நான் கடைக்கு போயி முதல்ல ஷேவ் பண்ணனும்டா...
ஆனந்த்:
சரிவா கிளம்பு, போலாம்...
சாமீ:
எனக்கு மேல நீ ரொம்ப ஆர்வமா இருக்க போலயே...
ஆனந்த்:
ம்ம்ம்... கிளம்பு, கிளம்பு...

கடுகல் பகுதி - 26
நானும், சாமீயும் கிளம்பி பிரசாத் வீட்டுக்கிட்ட இருந்த பார்பர் ஷாப்கு என்னோட வண்டில போனோம். அந்த பார்பர் கேட்ட முதல் கேள்வியே “பிரசாத் எங்க” அப்படிங்கிறது தான். “அவன் அவங்க அப்பா கூட ஊருக்கு போயிருக்கான் ஜி”னு சாமீ சொன்னான். எனக்கு இப்போ தான் புரிஞ்சது, சாமீ அவங்க அப்பாம்மாவ பஸ் ஸ்டாண்டுல ட்ராப் பண்றதுக்கு என்னைய ஏன் கூப்டான்னு. ஷேவிங் பண்ணினதுக்கப்பறம், ஹேர்ர லைட்டா ட்ரிம் (trim) பண்ணிட்டு, ஃபேஸ் ப்ளீச் (face bleach) பண்ணிட்டு அங்க இருந்து கிளம்பினோம். ஹோட்டல்ல போய் ஒரு சாப்பாடு வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டோம். வந்த உடனே சாமீ குளிச்சான். குளிச்சிட்டு வந்த உடனே வாங்கிட்டு வந்த ஒரு சாப்பாட ரெண்டு பேரும் சேர்ந்து சாப்டோம். சாப்டு ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பிட்டோம். அவங்க சின்னக்கா குழந்தைங்களுக்கு சாக்லேட் வாங்குறதுக்காக பஸ் ஸ்டான்ட் பக்கத்துல இருக்கிற ஒரு சூப்பர் மார்க்கெட்கு போனோம். அங்க சாக்லேட் பார்த்துட்டு இருக்கும் போது பிரசாத் கிட்ட இருந்து ஃபோன். ஃபோன் பேசி முடிச்சிட்டு என்கிட்ட திரும்பி:
சாமீ:
பிரசாத் இங்க வர்ரானாம். நீ அவன்கிட்ட பொண்ணு பார்க்க போற விஷயத்த சொல்லாத.
ஆனந்த்:
நான் ஏன்டா அவன்கிட்ட போய் பேச போறேன்.
அடுத்த சில நிமிஷத்துல, இல்ல... இல்ல... சில நொடிகள்ள அங்க வந்துட்டான். அதாவது நேரா பஸ்ல இருந்து இறங்கின உடனே அவங்க அப்பாகிட்ட இருந்து எஸ்கேப்பாகி இங்க வந்துட்டான். வந்ததுமே சாமீய துருவி துருவி கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டான். சாமீ அவன்கிட்ட இன்னைக்கி சின்னக்கா கோயில்ல ஸ்பெசல் ப்ரேயர்னு (prayer) பொய் சொன்னான். அதுக்கு தான் அப்பாம்மா முன்னாடியே போயிட்டாங்கன்னு அள்ளி விட்டான். அதுக்கப்பறம், ஒரு வழியா சாமீய பஸ் ஏத்தி விட்டுட்டு நான் அங்க இருந்து கிளம்பிட்டேன்.

கடுகல் பகுதி - 27
நான் எங்க வீட்டுக்கு போனவுடனே சாமிக்கு ஃபோன் பண்ணி சொன்னேன். அவனையும் சின்னக்கா வீட்டுக்கு போனவுடனே ஃபோன் பண்ண சொன்னேன். நைட் 1௦ மணி ஆகியும் சாமீகிட்டயிருந்து ஃபோன் வரவேயில்ல. அதனால நானே ஃபோன் பண்ணேன்.
சாமீ:
ம்... சொல்ல்லுடா...
ஆனந்த்:
என்ன ஃபோனயே காணோம்.
சாமீ:
வந்தேன்... உடனே டிரெஸ்ஸ மாத்திட்டு கிளம்பிட்டேன். இப்போ தான் வர்றேன்.
ஆனந்த்:
ஓஹ்... ஓகே ஓகே... பொண்ணு பார்த்தாச்சா?
சாமீ:
ஆங் பார்த்தாச்சுடா...
ஆனந்த்:
பிடிச்சிக்கா? அவங்க என்ன சொன்னாங்க...
சாமீ:
வழக்கம் போல பார்த்திருக்குடா... வேற ஒன்னும் கிடையாது...
ஆனந்த்:
ம்ம்ம்... சரிடா... சாப்டாச்சா?
சாமீ:
இன்னும் இல்லடா... அக்கா இப்போ தான் இட்லி ஊத்துது...
ஆனந்த்:
ம்ம்ம்... நைட் ரிட்டர்ன்னா?
சாமீ:
இல்லடா... காலைல தான் வரணும்...
ஆனந்த்:
சரிடா... வேறென்ன?
சாமீ:
வேறொன்னும் இல்லடா... நீ தூங்கு. நான் நாளைக்கி பேசுறேன்...
ஆனந்த்:
ம்ம்ம்... சரிடா... குட் நைட்...
சாமீ:
குட் நைட்...
ஆனந்த்:
ஸ்வீட் டிரீம்ஸ்...
சாமீ:
ஸ்வீட் டிரீம்ஸ்...
ஆனந்த்:
ஐ லவ் யூ டா...
சாமீ:
மீ டூ...
ஆனந்த்:
பை டா...
சாமீ:
பை பா...
     சாமீக்கு என்கிட்ட “வழக்கம் போல தாண்டா”னு சொன்னது எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்தது. நிம்மதியா தூங்க போனேன்.



4 comments:

  1. வழக்கம் போல் அருமையாக இருக்கு ஆனா அந்த பொண்ணு பாக்கிற இடம் கொஞ்சம் உறுத்தல் கலந்து வருவது போல் இருக்கு...இருவரின் உணர்வுகள் புரியலே...ஏன்னு தெரியல...படிக்கும்போது ஒருவிதமான கலக்கமாக இருக்கு...waiting for the next

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. சாம்ராம்... இந்த கதை, ஒரு புதிய பெண்ணின் வருகையால் உண்டாகும் மாற்றங்களைப் பற்றியது. முழுக்க முழுக்க என் பார்வையில் நான் அனுபவித்த இன்ப துன்பங்களை உள்ளடக்கியது. ஏனெனில் சாமீயின் உணர்வுகளை இன்றளவும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

      Delete
  2. நல்லா போகுது... பிரசாத் கிட்ட மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.ரோத்தீஸ் அண்ணா. பிரசாத்'கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியிருந்தே பொண்ணு பார்க்கிறாங்க. அவனுக்கு எதுவும் செட் ஆகல. அதனால பொண்ணு பார்க்க போற விஷயத்த, சாமீ வீட்ல எப்பவுமே அவன்கிட்ட சொல்ல மாட்டாங்க. பொதுவாவே, சாமீ எப்பவுமே என்கிட்டயும் சில விஷயங்களை மறைப்பான். அதே போல பிரசாத்கிட்டயும் சில விஷயங்களை மறைப்பான். ஆனா எல்லா விஷயமும் ரொம்ப ஈசியா அவங்க அம்மா மூலமா தெரிஞ்சிடும்.

      Delete