கடுகல் பகுதி – 32
12 மணிக்கு வர்றேன்னு சொன்னவன், 1 மணிக்கு தான் வந்தான். கூடவே
பிரசாத்தையும் கூட்டிட்டு தான் வந்தான். அதனால நான் எதுவும் கேக்கல. நிச்சயதார்த்தத்துக்கு
இவங்க வீட்லருந்து சீர் கொடுக்கணும்னு சொன்னாங்க. சாமீயோட ஆசைப்படி 36 தட்டு சீர்
கொடுக்கணும்னு பிளான் பண்ணினாங்க. அப்போ சாமீ என்கிட்ட வந்து பேசினான்.
சாமீ:
|
உன்கிட்ட
எவ்ளோட இப்போ எவ்ளோடா இருக்கு?
|
ஆனந்த்:
|
என்கிட்டயா பர்ஸ்ல (purse) ஒரு 3௦௦ ரூபா இருக்கு...
|
சாமீ:
|
நான் பர்ஸ்ல
கேக்கல. உன் கார்ட்ல (card) எவ்ளோ
இருக்கு?
|
ஆனந்த்:
|
கார்ட்ல ஒரு 5௦௦௦ ரூபா
இருக்கும்.
|
சாமீ:
|
ஓ
அப்பிடியா... இப்ப இந்த நிச்சயதார்த்தத்துக்கு ஒரு 2௦,௦௦௦ வேணும். நான்
ஆபீஸ்ல ப்ரசான்னா அண்ணன் கிட்ட தான் கேட்டிருந்தேன். அவர் தர்றேன்னு சொன்னாரு.
காலைல வாங்கிக்க சொன்னாரு. ஆனா, அவங்க சொந்தகாரங்க யாரோ அவசரமா கேட்டதால
கொடுக்கவா’னு கேட்டாரு. நான் சரின்னு சொல்லிட்டேன். பிரசாத்தோட அப்பாவும் இங்க
இல்ல. அதான் உன்கிட்ட கேக்குறேன். உன்னோட ஃபிரண்ட்ஸ் யார்கிட்டயாவது வாங்கி
கொடுடா? அடுத்த வாரம் கொடுத்திடலாம்.
|
ஆனந்த்:
|
ம்ம்ம்... சரி நான்
கேட்டுப்பார்க்கிறேன்.
|
சாமீ:
|
டேய் என்னடா,
கேட்டுப்பார்க்கிறேன்னு சொல்ற, வாங்கி கொடுடா... உன்னை நம்பித்தான் இருக்கேன்.
|
ஆனந்த்:
|
வாங்கித்தறேன். ஆனா,
ஒழுங்கா அடுத்த வாரம் கொடுத்திடு. எப்பவும் எங்கிட்ட வாங்கிட்டு தராம இருக்கிற
மாதிரி பண்ணாத சாமீ... முன்னாடி எனக்கு ஸ்ஸ்டைஃபன்ட் இருந்திச்சி... இப்போ
இல்ல...
|
சாமீ:
|
டேய்,
கண்டிப்பா கொடுத்திடுவேன்டா...
|
ஆனந்த்:
|
ம்ம்ம்... பார்ப்போம்,
நீ என்ன பண்றனு....
|
என்னோட ஃபிரண்ட்ஸ்
கிட்ட பணம் வாங்குறது பெரிய விஷயம் கிடையாது. இவன் இன்னிக்கு வரைக்கும் வாங்கின
பணம் எதையுமே தந்தது இல்ல. அது நான் அடுத்தவங்க கிட்ட வாங்கிக் கொடுத்தாலும் சரி. அவன்கிட்ட
ஒவ்வொரு தடவையும் கேட்டு கேட்டு பார்த்திட்டு கடைசியா நானே என் ஸ்டைஃபன்ட்ல
இருந்து கொடுக்க வேண்டியவங்களுக்கு கொடுத்திடுவேன். தீசிஸ் சப்மிட் பண்ணதால
ஸ்டைஃபன்ட் நின்றுச்சு. இந்த தடவ என்ன நெலமையாகப் போறேன்னு யோசிச்சிட்டு, என்னோட
காலேஜ் ஜூனியர் (junior) ரெண்டு பேர் கிட்ட ஃபோன் பண்ணி, என்னோட அக்கௌன்ட்கு (account) ஆளுக்கு பத்தாயிரம் ரூபா டிரான்ஸ்ஃபர் (transfer) பண்ண சொன்னேன். சீனியர்
சொன்னா மறுப்பேது... அது மட்டும் கிடையாது. நானும் அவங்களுக்கு பண விஷயத்துல நிறைய
ஹெல்ப் (help) பண்ணிருக்கேன். அடுத்த
5 நிமிஷத்துல என்னோட அக்கௌன்ட்கு டிரான்ஸ்ஃபர் ஆகிடுச்சு.
ஆனந்த்:
|
சாமீ, பணம்
என்னோட அக்கௌன்ட்கு வந்துருச்சு...
|
சாமீ:
|
அதுக்குள்ளயும்மா...
ரொம்ப தேங்க்ஸ்டா.
|
ஆனந்த்:
|
உன்னோட
தேங்க்ஸ நீயே வெச்சிக்கோ. அடுத்த வாரம் தர்றேன்னு சொல்லித்தான் வாங்கிருக்கேன்.
ஒழுங்கா கொடுத்திடு...
|
சாமீ:
|
கண்டிப்பா
கொடுத்திடுறேன்டா...
|
ஆனந்த்:
|
ம்ம்ம்...
சரி...
|
கடுகல் பகுதி – 33
பணத்தை ரெடி
பண்ணதுக்கப்பறம் 36 தட்டு சீர் என்னென்ன வக்கிறதுன்னு, அப்படிங்கிற லிஸ்ட் ரெடி
பண்ணோம்.
தேங்காய் – 5 தட்டு,
ஆப்பிள் – 2 தட்டு,
ரஸ்தாளி – 2 தட்டு,
பச்சைபழம் – 2 தட்டு,
செவ்வாழை – 1 தட்டு,
மாதுளை – 1 தட்டு,
பலாப்பழம் – 1 தட்டு,
மாம்பழம் – 1 தட்டு,
அன்னாச்சிப்பழம் – 1
தட்டு,
பச்சை திராட்சை – 1
தட்டு,
சப்போட்டா – 1 தட்டு,
பேரீச்சம் பழம் – 1
தட்டு,
லட்டு – 1 தட்டு,
பூந்தி – 1 தட்டு,
மைசூர்பாகு – 1 தட்டு,
ஜிலேபி - 1 தட்டு,
பாதுஷா – 1 தட்டு,
சாக்லேட் - 1 தட்டு,
மல்லிகை பூ - 1 தட்டு,
கனகாம்பரம் – 1 தட்டு,
ரோஜாப்பூ - 1 தட்டு,
ஊட்டி ரோஸ் – 1 தட்டு,
பூ மாலை – 1 தட்டு,
சீனி + பொரிகடலை - 1
தட்டு,
கற்கண்டு + ஜெம்ஸ் – 1
தட்டு,
பட்டு புடவை – 1 தட்டு,
மேக்கப் பொருட்கள் – 1
தட்டு,
குங்குமம் + சந்தானம் –
1 தட்டு,
வெத்தலை + பாக்கு – 1
தட்டு,
லிஸ்ட்
போட்டதுக்கப்புறம், அதெல்லாம் வாங்குறதுக்காக நான், சாமீ, அவங்க பெரியக்கா, சாமீயோட
பக்கத்து வீட்டு ஃபிரண்டு ஜூடு (Jude), பிரசாத் எல்லாரும் 4 மணிக்கு
கடைத்தெருவுக்கு கிளம்பினோம். முதல்ல வாங்கினது 36 தட்டு தான். பொண்ணு வீட்ல எப்படியும் கொடுத்த தட்டை திரும்ப கொடுத்திடுவாங்கன்னு நல்ல
காஸ்ட்லி தட்டாவே வாங்கினாங்க. அப்பறம் பட்டுப்புடவை தவிர மிச்ச 35 தட்டுக்கு
வக்கிறதுக்காக வாங்க வேண்டியது எல்லாம் வாங்கினோம். எல்லாம் வாங்கி முடிக்க
கிட்டத்தட்ட மணி 1௦ ஆச்சு.
கடுகல் பகுதி – 34
அதுக்கப்பறம் அவங்க
வீட்ல கொண்டு வந்து வச்சிட்டு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம். சாப்பிடும் போது
யதார்த்தமா பேசிட்டு இருந்தோம். அப்போ:
பெரியக்கா:
|
அம்மா, சாமீ
நிச்சயமான விஷயத்த ஆனந்த் கிட்ட சொல்லவே இல்லையாம்.
|
அம்மா:
|
அப்படியா ஆனந்து...
|
ஆனந்த்:
|
ஆமாம்மா...
சொல்லவே இல்ல.
|
அம்மா:
|
(சாமீகிட்ட) டேய் ஏண்டா
சொல்லல?
|
சாமீ:
|
நான் சொல்லலையா
என்ன? டேய் எப்படிடா சொல்லாம விட்டிருப்பேன். சொல்லிருப்பேன்டா...
|
ஆனந்த்:
|
இல்ல சாமீ. நீ
சொல்லல...
|
சாமீ:
|
சொல்லலையா...
தெரியல... மறந்திருப்பேன்...
|
பெரியக்கா:
|
நல்லா மறந்தடா... (பிரசாத்கிட்ட) உனக்கு
சொன்னானா பிரசாத்து?
|
பிரசாத்:
|
சொன்னான்கா...
|
பெரியக்கா:
|
பாருங்க இவனுக்கு
சொல்லிருக்கான்... அவன்கிட்ட சொல்லல...
|
சாமீ:
|
(சிரிச்சிக்கிட்டே)
யே நெஜமா, நான் வேணும்னுலாம் மறைக்கல. சொல்லிட்டேன்னு நினைச்சு விட்டுட்டேன்.
|
அம்மா:
|
இவன்கிட்ட சொன்னதுல
அவன்கிட்ட சொல்ல மறந்திருப்பான். விடுங்க. இத போயிட்டு பெருசா சொல்லிட்டு...
|
பெரியக்கா:
|
சரி, பொண்ணு
போட்டோ பார்த்தியா?
|
ஆனந்த்:
|
இல்லயேக்கா... பொண்ணு
போட்டோ இருக்கா என்ன?
|
பெரியக்கா:
|
என்னடா
இப்படி கேக்கற? ஒரு மாசமா இவன்கிட்ட தான் இருக்கு... உனக்கு காட்டவே இல்லையா?
|
ஆனந்த்:
|
எனக்கு தெரியாதுகா?
|
பெரியக்கா:
|
அடப்பாவிங்களா...
|
சாமீ:
|
டேய் நீ
பார்க்கலையாடா... பொய் சொல்லாதடா... அன்னிக்கு நான் உன்கிட்ட இங்க வச்சி காட்டல...
|
ஆனந்த்:
|
இல்லடா...
|
சாமீ:
|
அப்ப அது யார்கிட்ட
காட்டினேன்...
|
பிரசாத்:
|
(சிரிச்சிக்கிட்டே)
என்கிட்ட தான்டா காட்டின... (அந்த சிரிப்பு நக்கல் சிரிப்பு; அவன்கிட்ட மட்டும்
சொல்லிட்டானாம், அவன்கிட்ட மட்டும் போட்டோ காட்டிட்டானாம்)
|
சாமீ:
|
ஓ அப்பிடியா? ஸாரி டா.
இரு இப்போ காட்டிடுறேன். (நான்சிகிட்ட) அந்த மாமா பேக்கை (bag) திறந்து, உள்ள ஒரு செகப்பு டைரி (diary) இருக்கும் பாரேன். அதை எடுமா...
|
நான்சி:
|
(பேக்கை
தொறந்து செக் பண்ணிட்டு) டைரி எதுவும் இல்ல மாமா...
|
சாமீ:
|
ஏய், நல்லா பாருடி...
|
நான்சி:
|
இந்தாங்க...
நீங்களே பார்த்துக்கோங்க...
|
சாமீ:
|
(அவனும்
பார்த்திட்டு) ஆபீஸ்ல பொண்ணு போட்டோ பார்க்கணும்னு கேட்டாங்கன்னு கொண்டு
போனேன். டைரியோட அங்கேயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன்டா... கோவிச்சுக்காத...
|
பெரியக்கா:
|
நல்லா
மறந்தடா...
|
அம்மா:
|
அவனுக்கு நெறைய வேலை.
அதுல மறந்திருப்பான். நாளைக்கு தான் நேர்லயே போறோமே... அப்போ பார்த்திடு
ஆனந்து...
|
ஆனந்த்:
|
ம்ம்ம்...
சரிம்மா...
|
எனக்கு அவன் மேல அவ்ளோ கோபம் வந்தது. அவங்க அம்மாவும் அக்காவும் அங்க இல்லேனா
நடந்திருக்கிறதே வேற. சாமீயோட வீட்ல டின்னர் சாப்டுட்டு கிளம்பினேன். நான் என்னோட
வண்டிய ஸ்டார்ட் பண்ணும் போது அவன முறைச்சிக்கிட்டே தான் ஸ்டார்ட் பண்ணேன்.
ஆனந்த்:
|
நான்
வீட்டுக்கு போயிட்டு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.
|
சாமீ:
|
ஹா... ஹா... ஹா...
எனக்கு இன்னிக்கு தீபாவளி தான்னு சொல்லு... நான் இப்பவே தூங்க போறேண்டா... பை...
பை...
|
வீட்டுக்கு போயிட்டு
சாமீக்கு கால் பண்ணேன். அவங்க பெரியக்கா தான் அந்த கால்ல அட்டென் பண்ணாங்க. “அவன்
ஃபோன கீழ வச்சிட்டு மாடிக்கு போயிட்டான்”னு சொன்னாங்க. அதனால, நான் வீட்டுக்கு
வந்தத சொல்லிட்டு வச்சிட்டேன். அவன்கிட்ட
இருந்து ஃபோன் வரும்னு 1 மணி வரை எதிர்பார்த்தேன். வழக்கம் போல என்னோட இந்த
எதிர்பார்ப்பும் நிராசையாகிடுச்சு. அதுக்கப்புறம் காலைல 1௦ மணிக்கு எந்திரிக்க
என்னோட மொபைல்ல அலாரம் செட் பண்ணிட்டு தூங்க போனேன்.
கடுகல் பகுதி – 35
நாள்: ஜூலை 15; நேரம்: காலை 10.00 மணி
காலைல 1௦ மணிக்கு அலாரம் அடிச்சது. அத ஸ்நூஸ்
பண்ணிக்கிட்டே 1௦.3௦ மணி வரைக்கும் படுத்திருந்தேன். அதுக்கப்புறம் தான், சாமீயோட
பெரிய மாமாவ 11 மணிக்கு ரிசீவ் பண்ணனும்னு
ஞாபகம் வந்தது. வேக வேகமா குளிச்சிட்டு கிளம்பி ரெயில்வே ஸ்டேஷன் போய் அவர
கரெக்ட்டா 11 மணிக்கு ரிசீவ் பண்ணிட்டு சாமீ வீட்டுக்கு வந்தேன். ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டுட்டு
12 மணிக்கு, பட்டுப்படவை எடுக்க நான், சாமீ, அவங்க அம்மா, அப்பறம் அவங்க பெரியக்கா
எல்லாரும் கிளம்பினோம். கடைக்கு போயி ஆரணி, காஞ்சிபுரம், பனாரஸ், தர்மாவரம்னு பல
வகை பட்டுப்புடவைய உருட்டிட்டு இருந்தாங்க.
அந்த பட்டுப்புடவை பார்த்திட்டு இருந்த டைம்குள்ள, சாமீ
அவங்க அம்மாவ ஐஸ் வக்க அவங்களுக்கு ஒரு அரக்கு செவப்பு கலர்ல ஒரு பட்டுபுடவை
எடுத்துக்கொடுத்தான். அப்பறம், நான் எனக்கு அன்னிக்கு போட்டுகிறதுக்கு ஒரு சட்டை
மட்டும் எடுத்துக்கிறேன்னு சொல்லி (என் காசில தான்) எனக்கு பிடிச்ச மைல்ட்
பேபி பிங்க் கலர்ல 36 சைஸ்ல ஒரு சட்டை எடுத்தேன் (அதுவரைக்கும் என் சட்டை சைஸ் 34 தான். அது பத்தலைன்னு
சொல்லி 36 சைஸ் எடுத்தேன்). அத போட்டு அவன்கிட்ட காண்பிச்சி கேட்டேன்
ஆனந்த்:
|
எப்படி
இருக்கு சாமீ?
|
சாமீ:
|
நல்லாருக்குடா...
|
ஆனந்த்:
|
நீ என்ன
டிரஸ் போட போற சாமீ?
|
சாமீ:
|
நானா, சாட்டின்
க்ளோத்ல சந்தன கலர்ல ப்ளாக் டிசைன் போட்ட ஷர்ட் அதுக்கு ப்ளாக் பேன்ட்.
|
ஆனந்த்:
|
எப்போ
வாங்கின இந்த டிரஸ்ஸ?
|
சாமீ:
|
(ரொம்ப உற்சாகமா) நேத்து
காலைல தான், நானும் பிரசாத்தும் போய் சென்னை சில்க்ஸ்ல வாங்கினோம்.
|
ஆனந்த்:
|
நேத்து
காலைலயா? அப்போ, அந்த ஆபீஸ்ல முக்கியமான வேல இருக்குன்னு சொன்னது இத தானா? ஆக, என்ன வெவரமா கழட்டி விட்டுட்டு அவன
மட்டும் கூட்டிட்டு போய் எடுத்திருக்க? அப்படித்தான?
|
சாமீ:
|
நீ போயி பில்ல
கட்டிட்டு கீழ வா. நேரம் ஆச்சு. நான் அம்மாகிட்ட போறேன்.
|
நான் அவன்கிட்ட
கேட்டவுடனே அவங்க அம்மாகிட்ட ஓடியே போயிட்டான். எனக்கு அவன் மேல அவ்ளோ ஆத்திரமா
வந்தது. என்ன பண்றது? தலைவிதின்னு விட்டுட்டேன். கிட்டத்தட்ட ஒரு ரெண்டு மணி நேரம்
அந்த கடைய அலசி, கடைசியா ஒரு ப்ளூ கலர் காஞ்சிபுரம் பட்டுப்புடவைய எடுத்தாங்க. அந்த
பொண்ணு கலர்கு, இந்த புடவை தான் கரெக்டா இருக்கும்னு சாமீ தான் செலக்ட் பண்ணான்.
கடுகல் பகுதி – 36
வீட்டுக்கு வந்து,
லஞ்ச் சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்தோம். அப்போ அவங்க அப்பா அவன்கிட்ட பேசிட்டு
இருந்தார்.
அப்பா:
|
வண்டி
சொல்லிட்டியாப்பா?
|
சாமீ:
|
சொல்லியாச்சுப்பா...
வேன் சொல்லிருக்கேன்பா...
|
அப்பா:
|
நீ தனியா
கார்ல வாப்பா. உனக்கு வேன் சரிப்படாது...
|
சாமீ:
|
கார் ஒண்ணும் சொல்லிருக்கேன்பா.
|
அப்பா:
|
அப்ப சரி. நீ,
ஆனந்து, பிரசாத் எல்லாம் அதுல வந்திடுங்க.
|
சாமீ:
|
ம்ம்ம் சரிப்பா...
|
அவனும் அவங்க அப்பாவும்
பேசினதுல இருந்து நானும் அவன் கூட தான் போகப்போறேன்னு தெரிஞ்சது... அது மட்டும்
தான் ஆறுதலா இருந்தது. 4.30கு கிளம்பலாம்னு பிளான். 4 மணிக்கெல்லாம் எல்லாரும் கிளம்பிட்டாங்க.
அம்மா:
|
ஆனந்து, என்ன
நீ இன்னும் கிளம்பலையா?
|
ஆனந்த்:
|
நான் மூஞ்செல்லாம்
கழுவிட்டேன்மா... நான் அங்க வந்து சட்டை மாத்திக்கிறேன்...
|
சாமீ:
|
எங்க போயி
டிரஸ் மாத்துவ? அங்க டிரஸ் மாத்தவெல்லாம் டைம் கிடையாது... ஒழுங்கா நீ இப்பவே
மாத்திடு.
|
ஆனந்த்:
|
சரிடா...
|
நான் சட்டைய
அங்கயே மாத்திட்டேன். அதுக்கப்பறம் சாமீ குளிக்க போனான். குளிச்சு முடிச்சிட்டு,
நிச்சயத்துக்குன்னு சொன்ன சட்டைய போடல. வேற சட்டைய போட்டிருந்தான்.
|
|
ஆனந்த்:
|
நீ என்ன டிரஸ்
மாத்தலயா?
|
சாமீ:
|
நான் அங்க
வந்து டிரஸ் மாத்திக்குவேன்.
|
ஆனந்த்:
|
அங்க வந்தா? உனக்கு
மட்டும் டைம் இருக்குமா?
|
சாமீ:
|
யேய், நான்
தாண்டா மாப்பிள்ளை...
|
இப்படித்தான், என்னோட
கோபத்த கொஞ்ச கொஞ்சமா அதிகமாக்கிட்டிருந்தான். அவன் ஃபிரென்ட் ஜூடு கைல ஒரு
கேர்ரிபேக்கோட (carrybag) வந்தான்.
அப்பா:
|
என்னய்யா
ஜூடு, நிச்சயதார்த்ததுக்கே கிப்டா?
|
ஜூடு:
|
அய்யோ இல்லப்பா, அங்க
வந்து மாத்திக்க சட்டைப்பா...
|
அப்பா:
|
சரி...
சரிப்பா...
|
பிரசாத்:
|
ஜூடு, நான் ஒரு சட்டை
தர்ரேன், உள்ள வச்சிக்கிறியா...
|
ஜூடு:
|
குடுங்க
பிரசாத். வச்சிக்கிறேன்...
|
ஆக மொத்தம், நான்
மட்டும் தான் நல்லா ஏமாந்தவன்.
கடுகல் பகுதி – 37
சரியா 4.30’கு வேனும் காரும்
வந்திருச்சு. அவங்க சொந்த காரங்களும், அவங்க தெருவுல இருந்து நிச்சயத்துக்கு
வர்றவங்க எல்லோரும் வந்துட்டாங்க. எதிர்பார்த்த
கூட்டத்த விட அதிகமா இருந்தது... அந்த வேன் பத்தாதுன்னு அவசரகதில ரெண்டு கார
பிடிச்சாங்க... அப்படியும் அவங்க பெரியப்பா வழி ரெண்டு அண்ணன்கள், அவங்க
குழந்தைங்களும் மிச்சம்... மணி 5. வேறவழி இல்லாம அவங்களை சாமீயோட கார்ல அனுப்பி
வச்சிட்டு வேற ஏதாவது கார் கிடைக்குதான்னு தேடிட்டு இருந்தோம். 5.3௦ மணிக்கு கார்
கிடைச்சது. நான், விஜய், ஜூட், ஜனா எல்லோரும் பின் சீட்ல ஏறிக்கிட்டோம். விஜயோட
குட்டிபையன் விஜய் மடில உட்கார்ந்துக்கிட்டான். இன்னோரு கார் கிடைக்காததால, இப்படி
எல்லாரும் அந்த கார்ல ஏறினோம். ரொம்ப மூச்சு தெணறி கஷ்டப்பட்டு தான்
உட்கார்ந்தோம். பிரசாத் முன்னாடி டிரைவர் சீட் பக்கத்துல ஏறிக்கிட்டான். கார்
கரெக்டான ரூட்ல போகாம வேற ரூட்ல போச்சு.
ஜூடு:
|
என்னங்க பிரசாத்,
இந்த வழில போகுது.
|
பிரசாத்:
|
என்னோட ஃப்ரெண்டு
ஒருத்தன பிக்கப் பண்ணனும் ஜூட்... இதோ இங்க தான் ஜூட். இதோ நிக்குறான்.
|
ஜூடு:
|
ஒஹ்... ஓகேங்க.
|
பிரசாத்:
|
ஜான், உனக்கு எடம்
இல்லடா. நீ என் மடில தான் உட்காரனும்.
|
ஜான்:
|
சரிண்ணா... (கார்ல
ஏறின அந்த பையனுக்கு வெறும் 17 வயசு தான் இருக்கும். பிரசாத்கு வயசு 31. பார்க்க
பாவமா வேற இருந்தான்)
|
விஜய்:
|
(என் காதுல மட்டும்
கேக்கிற மாதிரி) இது யார்னு தெரியுமா?
|
ஆனந்த்:
|
(அவன்
காதுல மட்டும் கேக்கிற மாதிரி) தெரியலங்க விஜய்... இதுவரைக்கும் நான் இவன
பார்த்ததில்ல. பிரசாத் ஃபிரென்டா தான் இருக்கும்.
|
விஜய்:
|
(என் காதுல மட்டும்
கேக்கிற மாதிரி) பிரசாத் ஃபிரென்டா!!! அப்போ கண்டிப்பா மேட்டரா தான்
இருக்கும்... அய்யோ பாவம் அந்த பையன்...
|
நான் விஜய் சொன்னத
கேட்டு சிரிப்ப அடக்க முடியாம சிரிச்சிட்டேன். ஜூடும், ஜனாவும் சாமீயோட ஸ்கூல் கிளாஸ்மேட்ஸ்.
அவங்க ரெண்டு பெரும் பக்கா ஸ்ட்ரைட். அவங்க ரெண்டு பேரை தவிர்த்து மிச்சம் இருந்த விஜய்,
பிரசாத் அப்பறம் நான் எல்லோருமே ஓரினசேர்க்கையாளர்கள் தான் அப்படிங்கிற விஷயம் எங்களுக்குள்ள
தெரியும். விஜய்க்கு நானும் ஓரினசேர்க்கையாளன்னு தெரிஞ்சாலும் என்கிட்ட எதுவும் கேட்டுக்கிட்டதில்ல.
கடுகல் பகுதி – 38
நாங்க பொண்ணு ஊருக்கு போறப்ப
6.35 ஆகிடுச்சு. பிரசாத், ஜூட் எல்லாம் வேன்ல ஏறி டிரஸ் மாத்திட்டானுங்க. கிட்டத்தட்ட
பாதி நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சி. பொண்ணோட வீடு ரொம்ப பெருசு. சாமீ வீட்ட விட
ஒரு 25 மடங்கு பெருசு. மூணு மாடி வீடு. வீட்ட சுத்தி புல்வெளி, தோட்டம்னு வீடு ரொம்ப
பிரம்மாண்டமா இருந்தது. அவ்ளோ பெரிய வீட்லயும் நிச்சயதார்த்தத்துக்கு அவ்ளோ
கூட்டம். சாப்பாட்டுக்கு பந்தி போட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் நாங்க உள்ள
நுழைஞ்சி பொண்ண பார்க்கவே முடிஞ்சது. பொண்ணு கொஞ்சம் கருப்பு தான். எத்துப்பல்லு
வேற. பார்க்க ரொம்ப அழகு கிடையாது. சாமீ ரொம்ப நிறமா இல்லாட்டியும் நல்லா லட்சணமா இருப்பான்.
சாமீ அழக பத்தி ரொம்ப பேசுவானே, எப்படி ஒத்துக்கிட்டான்னு யோசிச்சேன். நாங்க ஒரு
இடத்துலயும் சாமீ ஒரு இடத்துலயும் இருந்தான். கடைசியா தான் நாங்க போய் போட்டோ எடுத்தோம்.
பிரசாத் தான் சாமீகிட்ட போய் நின்னான். நான் அந்த லைன்ல லாஸ்ட்டா தான் நின்னேன்.
நாங்க சாப்பிட்டு கிளம்ப 9.3௦ மணி ஆகிடுச்சு. நாங்க எல்லோரும் சாப்டுட்டு வெளிய வரும்
போது வேகமா பொண்ணு வீட்ல வேலை பார்க்கிறவரு ஓடி வந்தாரு.
வேலையாள்:
|
தம்பி, உங்க
நம்பர் சொல்லுங்க...
|
சாமீ:
|
9 9 9 * *
* * * * *..
|
வேலையாள்:
|
சரிங்க தம்பி, பொண்ணோட நம்பர் நோட் பண்ணிக்கோங்க.
|
சாமீ:
|
ஆங், சொல்லுங்க... (மொபைல் எடுத்து நோட்
பண்ணிக்கிட்டான்)
|
வேலையாள்:
|
8 8 8 * * * * * * *. சரிங்க தம்பி, எனக்கு உள்ள வேலை இருக்கு நான் போறேன்.
|
சாமீ:
|
சரிங்க.
|
அப்பவே ஜூடு சாமீய ஓட்ட
ஆரம்பிச்சிட்டான். பெரியக்கா சின்னக்கா வீட்லயே தங்க போறேன்னு சொல்லிட்டதால, வேன்ல
ஒரு மூணு சீட் காலியாச்சு. அந்த இடத்துக்கு சாமீ அவங்க அண்ணன்களை அனுப்பி
வச்சிட்டான். இப்போ சாமீ அவங்க அம்மா அப்பாவ அவனோட கார்ல வரசொல்லிட்டான். எங்களை “வேன்ல
அவங்க ரெண்டு பேரோட இடம் ஃப்ரீயா தான் இருக்கும். அதனால ரெண்டு பேர் அதுல
வந்திடுங்க”ன்னு சொன்னான். வேன்கு ஜுடும் ஜனாவும் போய் பார்த்திட்டு “அங்க இடமே
இல்லை”ன்னு சொல்லிட்டு மறுபடியும் கார்க்கே வந்துட்டாங்க. ரிட்டர்ன் வரும் போது,
சாமீக்கு கல்யாணமாகப்போறதால, இனிமே அவன் கூட சண்ட போட கூடாதுன்னு முடிவு பண்ணேன். கஷ்டப்பட்டு
ஒரு வழியா 1௦.3௦ மணிக்கு வந்து சேர்ந்தோம். அதுக்கப்புறம் கிளம்பி எங்க வீட்டுக்கு
வந்திட்டேன்.
சாமீ:
|
சொல்லுடா...
|
ஆனந்த்:
|
வீட்டுக்கு
வந்திட்டேன்டா...
|
சாமீ:
|
ம்ம்ம்...
சரிடா... நான் தூங்க போறேன்... நாளைக்கு பேசுவோம்... சரியா...
|
ஆனந்த்:
|
சரிடா... நீ தூங்கு...
|
சாமீ:
|
ம்ம்ம்...
சொல்லு...
|
ஆனந்த்:
|
குட் நைட்...
|
சாமீ:
|
குட் நைட்...
|
ஆனந்த்:
|
“ஸ்வீட் டிரீம்ஸ்.”
|
சாமீ:
|
“ஸ்வீட்
டிரீம்ஸ்.”
|
ஆனந்த்:
|
“ஐ லவ் யூ சாமீ.”
|
சாமீ:
|
“மீ டூ டா. பை
டா.”
|
ஆனந்த்:
|
பை டா.
|
என்னோட வாழ்க்கைல பல திருப்பங்கள்
ஆரம்பமாக போகுதுன்னு தெரியாம நான் நிம்மதியா தூங்க போனேன்.
தொட்டில் பழக்கம் சுடுகாட்டு வரைக்கும்னு சொல்வாங்க... சாமியோட கடன் வாங்குனா கொடுக்காத பழக்கம் இன்னும் தொடர்வது கொடுமை... அதைவிட ஆனந்த், அது தெரிந்தும் கொடுப்பது அதைவிட கொடுமை.... நிறைய இடத்தில் மனம் வலித்தது.... குறிப்பாக பிரகாஷ் சிரிக்கும்போது, அதை அதிகமாவே உணர முடிஞ்சுது.... இயல்பா விரைவா முடிஞ்சுது போல தெரியுது... திருமண வைபவத்தை கனத்த மனதோடு காண காத்திருக்கேன்...
ReplyDeleteநன்றி திரு. விஜய் விக்கி, சாமீயின் நண்பனின் பெயர் பிரசாத். நீங்கள் தவறுதலாக பிரகாஷ் என்று குறிப்பிட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
Deleteகிட்டத்தட்ட விஜய் விக்கியின் மனநிலை தான் எனக்கும்.. நீங்க நொந்ததுலயாவது ஒரு நியாயம் இருக்குது... உங்க நலன்விரும்பிங்கற முறைல நானும் ஏமாற்றம் அனுபவிச்சி நொந்துக்கறது கொடுமைங்க! :(
ReplyDeleteஒரு முறை ஏமாந்தத கூட சந்தோஷமா ஏத்துக்கலாம்... ஆனா... பல முறையும் ஏமாந்து அதையும் சந்தோஷமா சகிக்கணும்னா அதுக்கு ஒரு மனப்பக்குவம் வேணும்... உங்க விஷயத்துல.. இன்னும் ஒரு படி மேல போய் ஏமார்றதுக்குன்னே பிறப்பெடுத்த மாதிரி இருக்கு... ரொம்ப ஆத்திரமா... ஆதங்கமா இருக்கு...
சரி சரி... கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துகிட்ட மாதிரி தோணுது... தொடர்ந்து கதைங்க... சூனா பானா... மனச கல்லாக்கிக்கடா... கல்லாக்கிக்க.. :D
அவன சந்திச்ச அந்த மார்ச் 20, 2008ல இருந்து அவன் மேல ஓரு பைத்தியமா தான் இருந்தேன். என்னோட வாழ்க்கைல அவன எந்த ஒரு தருணத்திலும் மிஸ் பண்ணிட கூடாதுன்னு நான் பல விஷயங்கள்ள விட்டுக்கொடுத்து தான் போனேன். என் வாழ்க்கை முழுக்க அவன் என் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அது நடக்காதுன்னு எனக்கு தெரியும். ஆனாலும் ஆசைப்பட்டேன். அவன் கேட்கும் போது பணம் கொடுத்து உதவினதுக்கு காரணம் அவனும் நானும் வேற வேற இல்லன்னு நினைச்சேன்.
Deleteநான் கட்டிவச்ச அந்த கனவுகள எல்லாம் சேகரிச்சு வச்சிருந்த அந்த கண்ணாடி குடுவை ஒரு நாள் சில்லு சில்லு சிதருச்சு. அப்ப கூட அவன என்னால வெறுக்க முடியல.
இப்ப நான் அவன முழுசா நம்பல. நம்பவும் மாட்டேன். அவன்கிட்ட இருந்து என்னால எவ்வளவு தூரம் தள்ளி இருக்க முடியுமோ அவ்ளோ தள்ளி இருக்க தான் ஆசைப்படுறேன்.
நான் அவனுக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டேன். இப்பவும் கடவுள நம்புறேன். அவர் அவனுக்கு சரியான தண்டனை கொடுப்பார்.
அதிகமான உரிமை எடுத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி ஜி. அடுத்த வார எபிசோட் இன்னும் காரசாரமா இருக்கும் ஜி...
உங்க தரப்பு நியாயம் புரியுது சாமி... நேசிக்கறது தப்பில்லைங்க... இன்னும் சொல்லப் போனா... ஒருத்தர மட்டுமில்லாம.. தக்கார் தகவிலார் பாக்காம தான் நேசிக்கணும்... அது ரொம்பவே சிரமம்.. குறைஞ்ச பட்சம்.. நேசிக்கப்படறதுக்கு தகுதியானவங்களையாவது நேசிக்கலாம்ல... இப்படி சொல்றதுமே தப்பு தான்... ஆனா உங்க விஷயத்துல சொல்லலாம்னு தான் தோணுது...
Deleteநன்றி ரோத்தீஸ் அண்ணா. அண்ணன் வார்த்தைக்கு மறுவார்த்தையே கிடையாது... சிரம் தாழ்ந்து ஏற்றுக்கொள்கிறேன்...
Deleteநிகழ்வுகளை வேகமாக சொல்றீங்க...ஆனா நீங்க ஏன் இந்த அளவுக்கு ஏமாற்றம் தாங்குறீங்க புரியலையா or கல்லானாலும் காதலன் டைப்பா...
ReplyDeleteஎன்னோட வாழ்க்கைல ஏமாற்றங்கள் கொஞ்சம் அதிகம் தான். அதுக்கு முழு காரணம் நானே தான். ரோத்தீஸ் அண்ணா கிட்ட சொன்ன அதே காரணங்கள் தான் உங்களுக்கும் திரு. சாம்ராம். நன்றி...
Delete@ samram: LOL... நவமொழியா?? கல்லானாலும் காதலன்???? :D
ReplyDeleteஎல்லாத்திற்கும் காரணம் நாம் தான் புரிஞ்சா easyயா வெளி வந்துடலாம்...thnk god for that...so just put Ctrl+Alt+del(even his name should not in recylce bin of your mind) to the bad memory of that idiot...
ReplyDelete@Rotheiss நவமொழி word நல்லாருக்கு...but this is my mind voice whn I see boys like this...ha ha...