Friday, 20 June 2014

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) பகுதி 43-47



கடுகல் பகுதி43

     அதுக்கப்பறம் அன்னிக்கு நான் அவனுக்கு கால் பண்ணவே இல்ல. அவனா கால் பண்ணினா ஓகே தான்னு நான் விட்டுட்டுட்டேன். அவனும் எனக்கு கால் பண்ணவே இல்ல. அன்னிக்கு மட்டும் இல்ல. அதுக்கடுத்த நாளும்... ஆனா நான் அவன்கிட்ட இருந்து ஃபோன் வரும்னு காத்திட்டு இருந்தேன்... வழக்கம் போல என்னோட காத்திருப்பு வீணா தான் போனது...
நாள்: ஜூலை 22;        நேரம்: காலை 11.30 மணி
என்னோட மொபைல் “உன்னை நானறிவேன், என்னையன்றி யாரறிவார்”னு பாடுச்சு...
சாமீ:
ஹாய் டா, குட் மார்னிங். என்ன பண்ணிட்டு இருக்க?
ஆனந்த்:
ஒண்ணும் பண்ணல...
சாமீ:
ம்ம்ம்... நான் இப்போ தான் முழிச்சேன். அதான் ஃபோன் அடிச்சேன். பொறுமையா குளிச்சிட்டு கிளம்பி வா... நம்ம சாயந்திரம் படத்துக்கு போலாம்...
ஆனந்த்:
(நான் எதுவும் சொல்லாம அமைதியா தான் இருந்தேன்)
சாமீ:
டீல்லா நோ டீல்லா!!!
ஆனந்த்:
(நான் மறுபடியும் அமைதியா தான் இருந்தேன்)
சாமீ:
நீ கிளம்பி வா... நான் குளிக்க போறேன்... பை பை...

     பல நாள் பட்டினியா கிடந்த சோறே கிடைக்காத ஒருத்தன கூப்டு மட்டன் பிரியாணி வித் சிக்கன் 65 தர்றேன்னு சொன்னா எப்படி இருக்கும்... அப்படி இருந்தது எனக்கு... என்ன தான் அவன் பொறுமையா வா’ன்னு சொன்னாலும், அடுத்த அரை மணி நேரத்துல நான் ஆஜர்... அவங்க அம்மா, சமைச்சிட்டு இருந்தாங்க. நான் ரொம்ப அமைதியா உட்கார்ந்திருந்தேன். சாமீ’கிட்ட எதுவும் பேசல... அவனும் எதுவும் பேசல... ஒரு 1 மணிக்கு டி-ஷர்ட் ஷார்ட்ஸ் போட்டு எங்கயோ கிளம்பினான், என்கிட்ட வந்து “உன் வண்டி சாவிய கொடு, நான் கொஞ்சம் ஆபீஸ் வரைக்கும் போகணும்... ஒரு சின்ன வொர்க்...” அப்படின்னான். நான் எதுவும் பேசாம சாவிய எடுத்துக் கொடுத்தேன்.

கடுகல் பகுதி44

கிட்டத்தட்ட மூணு மணியாகியும் சாமீ வரவே இல்ல... அவங்க அம்மா என்ன சாப்ட சொன்னாங்க... நான் அவன் வந்ததும் சாப்பிடுறேன்னு சொல்லிட்டேன்... கிட்டத்தட்ட 3.45 மணிக்கு தான் வந்தான். வரும் போது பிரசாத்’த கூட்டிட்டு வந்தான். இவன் வந்தா எப்படி படத்துக்கு நாங்க மட்டும் தனியா போறது’ன்னு தோனுச்சு... ஆனா, எதையும் வெளிக்காட்டிக்கல. சாப்டுட்டு 4.30 மணிக்கு சாமீ ரொம்ப டயர்டா இருக்குன்னு படுத்துட்டான். நான் அவனுக்கு இடது பக்கமும் பிரசாத் வலது பக்கமும் படுத்துக்கிட்டோம்... நானும் தூங்கவே இல்ல, பிரசாத்தும் தூங்கவே இல்ல... நான் டைம் பார்த்துக்கிட்டே இருந்தேன்... சாமீ முழிக்கவே இல்ல. கிட்டத்தட்ட 8 மணிக்கு தான் முழிச்சான். பிரசாத் கிட்ட இருந்ததால நான் எதுவும் கேக்கல... டின்னர் முடிச்சதும், நான் அங்க இருந்து கிளம்பினேன்.

சாமீ:
யேய் ஆனந்த், பிரசாத்’த அவங்க வீட்ல கொண்டு போய் விட்டுட்டு போய்டு.
பிரசாத்:
பரவால டா... நான் பஸ்ல போய்க்கிறேன்...
சாமீ:
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... நீ இவன் கூட போயிடு...
பிரசாத் அவங்க அம்மாகிட்ட போயிட்டு வர்றேன்னு சொல்றதுக்காக உள்ள போனான்...
ஆனந்த்:
உன்னால எப்படி, இப்படியெல்லாம் பண்ண முடியுது சாமீ... எனக்கு தான் அவன பிடிக்காதுன்னு தெரியும்ல... அப்பறம் எதுக்கு அவன என் கூட அனுப்பி வக்கிற...
சாமீ:
கூட்டிட்டு போனு சொல்லும் போதே, சொல்ல வேண்டியது தானே, முடியாதுன்னு...
ஆனந்த்:
எப்படிடா அவன் முன்னாடி சொல்ல சொல்ற?
சாமீ:
தெரியுதுல்ல... அப்போ கூட்டிட்டு போ...
ஆனந்த்:
என்ன இன்னிக்கு படத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னேல?
சாமீ:
ஆமா, சொன்னேன்... அதுக்கு இப்போ என்ன?
ஆனந்த்:
ஆனா, கூட்டிட்டு போகலையே...
சாமீ:
நீ போலாம்னு சொல்லலயே...
ஆனந்த்:
நீ போலாம்னு சொல்லித்தான வர சொன்ன?
சாமீ:
இதை அப்பவே சொல்ல வேண்டியது தானே...
ஆனந்த்:
நீ தான் தூங்கிட்டு இருந்தியே... எப்படி சொல்றது...
சாமீ:
தூங்கிட்டு இருந்தேன்ல, உனக்கு போணும்னா, நீ தான் எழுப்பி சொல்லிருக்கணும். சொல்லாதது உன் தப்பு... என்னை எதுவும் சொல்லாத...
இது எனக்கு கிடைச்ச அடுத்த அடி... மறுபடியும் ஏன்டா போனோம்னு ஆகிடுச்சு... நைட் முழுக்க ஜெனிகிட்ட ஃபோன் பேசுறதால, அவனால பகல்ல தூங்காம இருக்க முடியல... என்னால இதை புரிஞ்சிக்க முடிஞ்சது. இதை நான் கேட்டு அவன் பண்ணாம இருந்தா கூட பரவால... சும்மா இருந்தவனை, அவனே கூப்டு இந்த மாதிரி பண்ணா என்ன பண்றது? பிரசாத்’த கொண்டு போய் அவன் வீட்ல ட்ராப் பண்ணிட்டு என் வீட்டுக்கு போயிட்டேன்...  

கடுகல் பகுதி45

அடுத்த ரெண்டு நாளும் நான் நார்மலாவே பேசல...

நாள்: ஜூலை 24;        நேரம்: மதியம் 3.30 மணி

சாமீ:
ஹாய் டா, என்ன பண்ணிட்டு இருக்க? சாப்டியா?
ஆனந்த்:
ஒண்ணும் பண்ணல...
சாமீ:
ம்ம்ம்... என்ன கோபமா இருக்கியா? பேச மாட்டியா?
ஆனந்த்:
கோபமெல்லாம் இல்ல... எனக்கு ரொம்ப பயமா இருக்கு சாமீ... எங்க உன்னை இழந்திடுவனோன்னு பயமா இருக்கு...
சாமீ:
நான் அதுக்கு ஒரு வழி சொல்றேன்... நீ 6 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்திடு... நாம எங்கயாவது போகலாம்... ஓகே வா
ஆனந்த்:
எனக்கு என்ன சொல்லன்னு தெரியல...
சாமீ:
ஓகே’னு சொல்லு...
ஆனந்த்:
நான் எப்படி ஓகே’னு சொல்ல முடியும்... இந்த வாரம் உனக்கு மந்த் எண்டு... நீ எப்படி என் கூட வரமுடியும்...
சாமீ:
அதை பத்தி நானே ஒண்ணும் கவலைப்படல... நீ ஏன் யோசிக்கிற? இன்னைக்கு நான் ஃப்ரீ தான்... நான் தான் பேப்பர் போட்டுட்டேன்ல...
ஆனந்த்:
பேப்பர்னா...
சாமீ:
ரெசிக்நேசன் லெட்டர்...
ஆனந்த்:
ஒஹ்ஹ்ஹ... ஓகே... ஓகே...
சாமீ:
சரி, நான் கொஞ்ச நேரம் தூங்க போறேன்...
ஆனந்த்:
முழிச்சிடுவியா?
சாமீ:
இன்னைக்கு பாரு... கண்டிப்பா முழிச்சிடுவேன்...
ஆனந்த்:
பார்க்கத்தானே போறேன்...
சாமீ:
சரிடா... பை பை...
    

கடுகல் பகுதி46

நாள்: ஜூலை 24;        நேரம்: மாலை 6. 00 மணி

வழக்கம் போல எங்க கைடு கிட்ட இருந்து எஸ்கேப்பாகி 6 மணிக்கு வந்து சேர்ந்தேன்... என்ன ஒரு அதிசயம்... சாமீ, எனக்காக வீட்டு வாசல்ல காத்திட்டு இருந்தான்...
ஆனந்த்:
கிளம்பலாமா?...
சாமீ:
ம்ம்ம்... போலாம்... இங்க குடு நான் ஓட்டுறேன்...
ஆனந்த்:
ம்ம்ம்... சரி...
வண்டிய அவன் ஓட்ட நான் பின்னாடி உக்கார்ந்துக்கிட்டேன்... அவங்க வீட்ல இருந்து கிளம்பின 5 நிமிஷத்துல அவனுக்கு ஃபோன் வந்தது... உடனே அவன் வண்டிய ஓரங்கட்டினான். என்கிட்ட வண்டிய கொடுத்திட்டு அவன் கொஞ்சம் தள்ளி போய் ஃபோன் பேச ஆரம்பிச்சான்... பேசினான்... பேசினான்... பேசிக்கிட்டே இருந்தான்... அப்போ அப்போ என்னை பார்த்து, ரெண்டு விரல்ல காமிச்சு சைகை காட்டினான்... இதோ ரெண்டு நிமிஷத்துல வந்திடுறேன்’னு அர்த்தமாம்... ஃபோன் பேசி முடிச்சிட்டு என்கிட்ட வரும் போது, மணி 9...

சாமீ:
போலாமா?...
ஆனந்த்:
எங்க?
சாமீ:
வீட்டுக்கு தான்... டைம் ஆகிடுச்சுல... அப்பா ஏற்கனவே மூணு தடவ ஃபோன் அடிச்சிட்டாரு... சீக்கிரம் உக்காரு... போலாம்...
அவன் செய்றதெல்லாம் என்னை கொஞ்சம் கொஞ்சமா கடுப்பேத்திக்கிட்டே  இருந்தது. வீட்டுக்கு வந்தா, அவங்க அப்பா வாசல்லயே காத்திட்டு இருந்தாரு...  
சாமீயோட அப்பா:
யோவ், இந்நேரத்துல எங்கயா போயிட்டு வர்றீங்க...
ஆனந்த்:
இல்லப்பா சும்மா கடைக்கி போய்ட்டு வந்தோம்பா..
சாமீயோட அப்பா:
இனிமேலாம், அன்டைம்ல எங்கயும் போகாதீங்கயா....
ஆனந்த்:
சரிங்கப்பா...
அவங்கப்பா இப்படி சொன்னதும், சாமீ என்னை பார்த்து கண்ணை காமிச்சான்... அதாவது, நான் அவனை எங்கயும் கூப்பிட கூடாதாம்... எனக்கு என்ன சொல்றது செய்யிறதுன்னே தெரியல... அவங்க வீட்ல சாப்டு வந்திட்டேன்... கால் பண்ணினப்போ செகண்ட் லைன்லயே போச்சு... கிட்டத்தட்ட மூணு கால்கு அப்பறம், ஃபோன் அட்டென்ட் பண்ணான்...
சாமீ:
சொல்லுடா...
ஆனந்த்:
நான் வந்திட்டேன்... அத சொல்றதுக்காக தான் கால் பண்ணேன்...
சாமீ:
சரிடா... நீ தூங்கு... நான் வக்கிறேன்.... பை பை...
இனிமே அவனாவே வந்து எங்க கூப்டாலும் எங்கயும் அவன் கூட போகக்கூடாதுன்னு முடிவு பண்ணேன்.


கடுகல் பகுதி47

நாள்: ஜூலை 26;        நேரம்: மதியம் 3.30 மணி

சாமீ:
ஹாய் டா, சாப்டியா?
ஆனந்த்:
சாப்டேண்டா...
சாமீ:
என்ன பண்ற?
ஆனந்த்:
காலேஜ்ல தான் இருக்கேன்...
சாமீ:
ம்ம்ம்... நீ 6 மணிக்கு இங்க வந்திடு... நாம ரெண்டு பேரும் எங்கயாவது போலாம்... ஓகே வா...
ஆனந்த்:
இல்ல சாமீ... நான் வர்ல...
சாமீ:
நானே கூப்பிடுறேன்... ஏன் ஓவரா பண்ற?
ஆனந்த்:
நான் ஓவரா பண்றேனா? ஏன் சொல்ல மாட்ட... ஒவ்வொரு தடவையும் ஏமாறுறது நான் தானே...
சாமீ:
இதெல்லாம் ஒரு ஏமாற்றமா?
ஆனந்த்:
பின்ன என்ன? ஒவ்வொரு விஷயமும் சொல்லத்தான் செய்வ... ஆனா எதுவும் நடக்காது... நீ தான் படத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்ன? ஆனா, கூட்டிட்டு போகல... நேத்து எங்கயாவது கூட்டிட்டு போறேன்னு சொன்ன... என்ன நடந்தது...
சாமீ:
என்ன நடந்தது... நீ தான கூட இருந்த... ஜெனிகிட்ட தானே பேசிட்டு இருந்தேன்... அப்பறம் என்ன?
ஆனந்த்:
எங்கயும் போகலையேனு ஒரு சாரியாவது சொன்னியா?
சாமீ:
அதெல்லாம் சொல்ல முடியாது... என்ன இப்போ?
ஆனந்த்:
நீ எங்கயும் கூப்பிடவே வேணாம்...
சாமீ:
இனிமே கூப்பிடவே மாட்டேன்... ஏதோ பாவம்னு கூப்டேன் பாரு... என்னை சொல்லணும்... கூட தான இருந்த... இதை கூடவா புரிஞ்சிக்க முடியாது... என்ன ஜென்மமோ நீ? வேற என்ன?
ஆனந்த்:
நான் என்ன ஜென்மமா வேணா இருந்திட்டு போறேன்... அடுத்த வாரம்னு சொல்லி பணம் வாங்க சொன்னியே... நான் வாங்கி கொடுத்து பத்து நாளைக்கு மேல ஆச்சு. இந்த நிமிஷம் வரைக்கும் அதை பத்தி ஏதாவது சொன்னியா? ஒவ்வொரு தடவையும் நீ இதையே தான் செஞ்சிருக்க... அப்பயாவது எனக்கு ஸ்டைஃபண்டு இருந்தது... எல்லாத்தையும் நானே கொடுத்தேன்...
சாமீ:
ரொம்ப பேசாத... ரெண்டு நாள்ல தர்ரேன்... ஃபோன வை...
எப்பயுமே சாமீ, கொடுத்த காச கேட்டா இப்படித்தான் பண்ணுவான்... என்னோட ஜூனியர் கிட்ட காசு வாங்கினதுனால, அவங்க கேக்க முன்னாடி கொடுக்கணும்னு தான் அவன்கிட்ட கேட்டேன். 

2 comments:

  1. இத்தனை முறை ஏமாற்றிஇருந்தால் நானல்லாம் பைத்தியமா ஆகிருப்பேன் ஜி... இத்தனையை மீறியும் உங்க உறவு தொடர்ந்தது எட்டாவது அதிசயம் ஜி... அந்த அளவுக்கு நீங்க அப்பாவியா? அவர் புத்திசாலியா?ன்னு தெரியல.... எது எப்படியோ, அடுத்த வாரமாவது நல்ல விதமாய் உங்க வாழ்க்கை பயணம் நடக்கும்னு நம்புறேன்.... பார்க்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. எட்டாவது அதிசயமோ இல்லையோ, நான் ஏன் இப்படி அவன் மேல பைத்தியமா இருந்தேன்னு இப்போ யோசிக்கிறேன்... எப்படியோ, இப்போ எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சு...

      Delete