கடுகல் பகுதி – 48
நாள்: ஆகஸ்ட் 08; நேரம்: மாலை 5.30 மணி
திடீர்னு எனக்கு எஸ்.எம்.எஸ்
வந்தது. அது யார்க்கிட்ட இருந்து வந்ததுன்னு பார்த்தா, அது நம்ம சாமீ கிட்ட இருந்து
வந்திருந்தது. அதை ஓபன் பண்ணி பார்த்தேன்... Hi dearனு இருந்தது... நான் வேணும்னே Msg maaththi anuppitteengalaa Saamee…னு (மெசேஜ் மாத்தி அனுப்பிட்டீங்களா சாமீ) பதில் எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். அதுக்கு
அவர் Eila mr. Anandனு (இல்ல மிஸ்டர். ஆனந்த்) அனுப்பிருந்தார்... நான் உடனே Enna athisayam. Innaikku night periya malai
kandippaa irukkuனு (என்ன அதிசயம்.
இன்னைக்கு கண்டிப்பா நைட் பெரிய மழை இருக்கு) அனுப்பினேன்... அதுக்கு அவர் o! K mr. Anandனு (ஓ! ஓகே மிஸ்டர். ஆனந்த்) பதில் அனுப்பினார். நான் உடனே அவர்கிட்ட Saamee, Why are you putting ‘mr’?னு கேட்டேன். அதுக்கு அவர் Suma
thnனு (சும்மா தான்) பதில் அனுப்பினார். சாமீ எப்பவுமே எஸ்.எம்.எஸ்
அனுப்பவே மாட்டான். இன்னைக்கு புதுசா அதுவும் இத்தனை எஸ்.எம்.எஸ் அனுப்பின உடனே, எனக்கு
டவுட்டு வந்தது. அதை உடனேயே அவன் கிட்ட Msg cutter pottirukkeengalaa?னு (மெசேஜ் கட்டர் போட்ருக்கீங்களா)
கேட்டேன்... அதுக்கு Very goodனு மெசேஜ் வந்தது... அதாவது நான் கண்டுபிடிச்சிட்டேன் அப்படிங்கிறத சொல்றாராமாம்...
எவ்வளோ நாள், நான் அவன மெசேஜ் கட்டர் போட சொல்லிருக்கேன். ஆனா, அவன் மெசேஜ் கட்டர்
போடவே மாட்டான்... இதப்பத்திக் கேட்டா, அவனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவே பிடிக்காதுன்னு சொல்லிடுவான்...
அதனால எனக்கு அடுத்த சந்தேகம் வந்தது... Veettukkaarammaa msg cutter poda sonnaangalaa?னு (வீட்டுக்காரம்மா மெசேஜ் கட்டர் போட சொன்னாங்களா?) கேட்டேன்... No my only ideaனு பதில் வந்தது... எனக்கு தெரியாதா என்ன... (மொச பிடிக்கிற நாய, மூஞ்சிய பார்த்தாலே
தெரியாது). அதனால Poi sollaatha Saamee.
Ivlo naal illaama msg cutter pottaa enna artham Saamee?னு (பொய் சொல்லாத சாமீ. இவ்ளோ நாள் இல்லாம மெசேஜ் கட்டர் போட்டா என்ன அர்த்தம்
சாமீ?) அனுப்பினேன். அதுக்கு சம்பந்தமே இல்லாம I m watch the c d faனு பதில் வந்தது. அது வேணும்னே
சம்பந்தம் இல்லாம எனக்கு அனுப்பி வச்ச மெசேஜா இல்ல ஜெனிக்கு அனுப்ப வேண்டிய மெசேஜ
எனக்கு மாத்தி அனுப்பிட்டானான்னு டவுட்டு... இருந்தாலும் What cd?னு பதிலுக்கு மெசேஜ் அனுப்பினேன்... ஆனா, கடைசி வரைக்கும் பதில் வரவே இல்ல... அதுக்கப்பறம்,
அத பத்தி கேக்கணும்னு எனக்கு தோணல... அப்படியே விட்டுட்டேன்...
கடுகல் பகுதி – 49
நாள்: ஆகஸ்ட் 22; நேரம்: இரவு 8.30 மணி
சாமீ:
|
ஹாய் டா, சாப்டியா?
|
ஆனந்த்:
|
ம்ம்ம்... சாப்டேண்டா...
நீ சாப்டியா?
|
சாமீ:
|
இப்ப தான்
சாப்டேன்... வீட்டுக்கு பேசிட்டியா?
|
ஆனந்த்:
|
ம்ம்ம்...
பேசிட்டேன்டா...
|
சாமீ:
|
எல்லாரும்
எப்படி இருக்காங்க?
|
ஆனந்த்:
|
எல்லாரும் நல்லாருக்காங்க...
|
சாமீ:
|
ம்ம்ம்...
வேறென்ன?
|
ஆனந்த்:
|
ஒரு விஷயம் இருக்கு...
இப்போ கேக்கவா?
|
சாமீ:
|
ஏதாவது
பிரச்சனைனா இப்போ பேசாத... இல்லைனா பேசு...
|
ஆனந்த்:
|
எனக்கு அடுத்த வாரம்
பர்த்டே.
|
சாமீ:
|
ஆமால்ல...
எனக்கு ஞாபகம் இருக்கு...
|
ஆனந்த்:
|
ஞாபகம்
இருக்கட்டும்... நீ என்கூட பழக ஆரம்பிச்சதுல இருந்து, இது வரைக்கும் எந்த
வருஷமும் பர்த்டேக்கு முந்தின நாள் ராத்திரி என்கூட இருந்தது இல்ல... இந்த
பர்த்டேக்கு அந்த நைட் ஃபுல்லா நீ என்கூட இருக்கணும். இது தான் நான் உன்கிட்ட
இருந்து கேக்கிற பர்த்டே கிப்ட். பர்த்டே அன்னிக்கு நீ என்கூட இருக்கணும்கிறது
என்னோட பல வருஷ கனவு... இந்த பர்த்டேக்கு தான் நீ ப்ரீ. இத மிஸ் பண்ணினா இனிமே
அதுக்கான வாய்ப்பே கிடையாது. ஏன்னா, அடுத்த வருஷம் இத நான் உன்கிட்ட கேக்க
முடியாது... புரிஞ்சிக்குவன்னு நினைக்கிறேன்.
|
சாமீ:
|
ம்ம்ம்...
விடு இந்த வருஷம் ஜமாய்ச்சுடுவோம்...
|
ஆனந்த்:
|
நீ சொல்லுவ... ஆனா,
செய்ய மாட்ட... இது வரைக்கும் ஒரு பர்த்டேக்கு கூட நைட் ஃபோன் பண்ணி விஷ்
பண்ணினதே கிடையாது... பார்ப்போமே செய்றியான்னு...
|
சாமீ:
|
சொல்லிட்டேல...
மறக்க மாட்டேன்...
|
ஆனந்த்:
|
ம்ம்ம்...
|
சாமீ:
|
சரிடா, என்னை
ஜெனி கூப்பிடுது... நான் வக்கிறேன்... குட் நைட்...
|
இந்த
மாதிரி சாமீ, என் பதிலுக்காக காத்திருக்காம ஃபோன கட் பண்ணிட்டு போறது எனக்கு
பழகிடுச்சு... ஒவ்வொரு வருஷமும் நான் பொங்கல் தீபாவளி கொண்டாடுறேனோ இல்லையோ,
கட்டாயம் என் பர்த்டேவ கொண்டாடுவேன்... நிச்சயம் என் பல வருஷ கனவு ஒரு வழியா
பலிக்க போகுதுங்கிற சந்தோசம் எனக்குள்ள நிறையவே இருந்தது...
கடுகல் பகுதி – 5௦
நாள்: ஆகஸ்ட் 23; நேரம்: காலை 7.30 மணி
தூக்கம் கலைஞ்சு, படுக்கைல படுத்துக்கிட்டே யார் யார் ஃபார்வர்ட் மெசேஜ் அனுப்பிருக்காங்கன்னு
பார்க்குறதே ஒரு தனி சுகம்... அப்படி பார்க்கும் போது என் கண்ணுல பட்டது சாமீ அனுப்பின
மெசேஜ் தான்... I love u my dear.nal thoogu
da i ll tack careனு (ஐ லவ் யூ மை டியர்.
நல்லா தூங்கு டா. ஐ வில் டேக் கேர்) இருந்தது... அந்த மெசேஜ்ல இருந்த ஐ லவ் யூ’ங்கிறத
பார்த்த உடனே எனக்குள்ள உண்டான சந்தோசத்துக்கு அளவே இல்ல... அது கூடவே, ஐ வில் டேக்
கேர்’னு இருந்ததை பார்க்கும் போது, நிச்சயம் சாமீ என் கூட தங்குவான்கிற மிகப்பெரிய
நம்பிக்கை உண்டாச்சு...
கடுகல் பகுதி – 51
நாள்: ஆகஸ்ட் 29; நேரம்: இரவு 8.30 மணி
சாமீ:
|
ஹாய் டா, வீட்டுக்கு
வந்துட்டியா?
|
ஆனந்த்:
|
ம்ம்ம்... இப்போ தான்டா
வந்தேன்...
|
சாமீ:
|
ம்ம்ம்...
ஓகே டா... சரி, அப்படியே வந்து கதவ தொற பார்ப்போம்....
|
ஆனந்த்:
|
ஏய் வந்துட்டியா...
|
நான் கதவ தொறந்தேன். வாசல்ல சாமீ, ஒரு
கைல எனக்கு பிடிச்ச டெட்டி பியரும் இன்னோரு கைல ஒரு கேர்ரி பேக்கும்
வச்சிருந்தான்... அவன் உள்ள வந்ததும் வெளிக்கதவ சாத்திட்டு ரூம்குள்ள போனேன்... ரூம்
கதவுக்கு சைடுல மறைஞ்சிருந்து என்ன பின்னாடி வந்து கட்டி பிடிச்சிக்கிட்டு “இது
என்னோட ஆனந்த் குட்டிக்கு என்னோட கிப்ட்”னு சொல்லி அந்த ஒரு கைல டெட்டியவும் இன்னோரு
கைல ப்ளாக் பேன்ட் + வெள்ளை கலர்ல ப்ளூ அண்ட் ப்ளாக் ஸ்ட்ரைப்ஸ் போட்ட சர்ட்டும்
கொடுத்தான்.
ஆனந்த்:
|
ரொம்ப
தேங்க்ஸ்டா...
|
சாமீ:
|
ச்சீ, இதுக்கெல்லாமா
தேங்க்ஸ்...
|
ஆனந்த்:
|
சரி வா, நம்ம
போய் சாப்பாடு வாங்கிட்டு வரலாம்...
|
சாமீ:
|
இப்ப என்ன அவசரம்.
அப்பறம் போய் வாங்கலாம்...
|
என்னை அப்படியே இழுத்துட்டு போய் பெட்ல
உக்கார்ந்தான்... நான் அவன் மடில படுத்துக்கிட்டு அவன் வலது கைய
பிடிச்சிக்கிட்டேன்... கொஞ்ச நேரத்துல அவன் இடது கையாள அவன் பெல்ட்ட கழட்டி
விட்டுட்டு அவன் ஜிப்ப தொறந்தான்... நான் அப்பவும் அப்படியே படுத்திருந்தேன்...
சீக்கிரம் முடிடா. நான்
வீட்டுக்கு கிளம்பணும்’னு சொன்னான்...
இதக்கேட்ட உடனே எனக்கு தூக்கி வாரிப்போட்டுச்சு... ஏன்னா, நான் அவன் ஃபுல் நைட்
என் கூட இருப்பான்னு நினைச்சேன்... அதுவும் இல்லாம, நான் அவன வெறும்மனே
படுக்குறதுக்காக மட்டுமே கூப்ட்டது மாதிரி பேசினது ரெண்டுமே சேர்ந்து எனக்கு கோபத்தையும்
அழுகையவும் உண்டாக்குச்சி...
ஆனந்த்:
|
போன வாரம்
கேட்டப்போ என்கூட ஃபுல் நைட் இருக்கிறேன்னு சொன்னியே...
|
சாமீ:
|
ஏய் எப்படிடா? கல்யாணம்
நிச்சயமாகிடுச்சு... அம்மாட்ட கேட்டேன்... அவங்க வெளிய எங்கயும்
தங்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க... அப்பறம் எப்படிடா... உனக்காக இவ்ளோ தூரம்
வந்ததே பெருசு... உனக்கே தெரியும், அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வந்திடனும்னு
சொல்லிருக்கார்ல...
|
ஆனந்த்:
|
அதெல்லாம்
ஓகே தான்... இத போன வாரம் நான் கேக்கும் போதே, என்கிட்ட சொல்லிருக்கலாம்ல...
|
சாமீ:
|
அப்பவே சொன்னா மனசு
கஷ்டப்படுவன்னு தான் சொல்லல...
|
ஆனந்த்:
|
இப்ப
சொல்றப்ப மட்டும் மனசு கஷ்டப்படலையா?
|
சாமீ:
|
இருந்தாலும் கொஞ்சம்
கம்மியா இருக்கும்ல... அதான்...
|
ஆனந்த்:
|
சரி, நீ
கிளம்பு சாமீ...
|
சாமீ:
|
நெஜமாவா?
|
ஆனந்த்:
|
ஆமாம்... நெசமாத்தான்
சொல்றேன் சாமீ... நீ கிளம்பு...
|
சாமீ:
|
சரி, நீ இன்னும்
சாப்பிடலைல... என்கூட வா... சாப்பாடு வாங்கிட்டு உன்னை வீட்ல கொண்டு வந்து ட்ராப்
பண்ணிட்டு போறேன்...
|
ஆனந்த்:
|
வேண்டாம்
சாமீ... நான் போய்க்கிறேன்...
|
சாமீ:
|
நீ சாப்பிட மாட்ட...
எனக்கு தெரியும். ஒழுங்கா எங்கூட வா... நான் தான் கூப்பிடுறேன்ல... வாயேண்டா...
|
ஆனந்த்:
|
சரி
வர்றேன்... என்னை கடைல ட்ராப் பண்ணிட்டு போயிடு... அது போதும்... நான் ரிட்டர்ன்
பஸ்ல வந்துடுறேன்...
|
எனக்கு அவன் கூட வண்டில போகும்
போது அழுகை தான் வந்தது... எனக்கு உடனே ஒரு யோசனை வந்தது...
ஆனந்த்:
|
சாமீ, ப்ளீஸ்
என்னை அந்த பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுடு...
|
சாமீ:
|
ஏண்டா...
|
ஆனந்த்:
|
நான்
காலேஜ்கு போறேன்... நான் தனியா இருந்தா ரொம்ப கஷ்டமா இருக்கும்... ரொம்ப அழுவேன்...அதனால
நான் காலேஜ்கு போறதுன்னு முடிவு பண்ணிட்டேன்...
|
சாமீ:
|
அங்க எங்க போவ...
|
ஆனந்த்:
|
ஹாஸ்டல்க்கு
போனா, அங்க எங்க பசங்க எல்லாரும் இருப்பாங்க...
|
சாமீ:
|
சரி சாப்டு போ...
|
ஆனந்த்:
|
இல்ல, சாப்டா
கடைசி காலேஜ்கு போற லாஸ்ட் பஸ்ஸ மிஸ் பண்ணிடுவேன்...
|
சாமீ:
|
அப்போ எங்க போய் சாப்பிடுவ...
|
ஆனந்த்:
|
காலேஜ்ல நைட்
காண்டீன் இருக்கு... அங்க போய் சாப்டுக்கிறேன்.
|
சாமீ:
|
கண்டிப்பா போய்த்தான்
ஆகணுமா...
|
ஆனந்த்:
|
என்னை வேற
என்ன பண்ண சொல்ற? என்னால தனியா இருக்க முடியாது... இருந்தா செத்திடுவேன்... அங்க
போனா கண்டிப்பா என் மைன்ட் மாறும்...
|
சாமீ:
|
புரியுது... ஆனா,
இந்நேரத்துல எதுக்குன்னு யோசிச்சேன்...
|
ஆனந்த்:
|
எனக்கு வேற
வழி இல்ல சாமீ...
|
சாமீ:
|
பேசாம, நீ எங்க
வீட்டுக்கு வந்திடேன்...
|
ஆனந்த்:
|
நெஜமாவா
சொல்ற...
|
சாமீ:
|
ஆமா நெஜமாத்தான்
சொல்றேன்... அம்மாகிட்ட உனக்கு பர்த்டேங்கிறதால உங்க பசங்கலால நைட் டார்ச்சர்
இருக்கும்னு சொல்லிக்கலாம்... ஓகே வா...
|
ஆனந்த்:
|
ம்ம்ம்
சரி...
|
“நீ எங்க வீட்டுக்கு வந்திடேன்”னு
அவன் சொன்னதும் உண்மைல எனக்கு அவ்ளோ
சந்தோஷம்... ஏன்னா, நான் விரும்பினது அந்த ராத்திரி ஃபுல்லா அவன் என் கூட
இருக்கணும், நான் அவன பார்த்துக்கிட்டே இருக்கணும்’னு தான்... அது என்னோட இடமா
இருந்தா என்ன, அவனோட இடமா இருந்தா என்ன...
என்னடா ஆரம்பம் முதல் நல்லா போகுதேன்னி நினச்சேன்....
ReplyDelete////சீக்கிரம் முடிடா, நான் கிளம்பனும்////னு சொன்னதை கேட்டு எனக்கே அதிர்ச்சி ஆகிடுச்சு.... எங்க ஊர்கள்ல பழமொழி ஒன்னு சொல்வாங்க... பரங்கி விதையை போட்டா, சுரைக்காயா காய்க்கும்?னு சொல்வாங்க.... அதுமாதிரி சாமி குணம் மட்டும் எண்ண இடைல மாறிடவா போகுது?.... ஹ்ம்ம்.... எப்படியோ அவர் வீட்ல தங்குன நிம்மதி உங்களுக்கு, அந்த ராத்திரி கண்ணீரால் நிரப்பப்படவில்லை என்கிற ஆறுதல் எங்களுக்கு....
உங்கள் கருத்துக்கு நன்றி விஜய் ஜி... நடந்த விஷயங்கள்ல ஒரே ஆறுதல் அங்கே தங்கினது மட்டும் தான்... அங்க நடந்த சில காமெடி ட்ராஜெடி எல்லாம் அடுத்த அத்தியாயத்துல சொல்றேன் ஜி...
ReplyDeleteகாமெடி, ட்ராஜெடி எல்லாம் அடுத்த அத்தியாயத்துல மட்டும் வந்தா நல்லாயிருக்கும்னு தோணுது.. இனி எல்லாம் சுகமேன்னு கதைல எப்பதான் ஒரு சந்தோஷ சமாச்சாரம் வருமோ.. தெரியல.. :(
ReplyDeleteரொம்ப நம்பிக்கையோட எதிர்பாக்கறேன்.. :)