Thursday, 12 June 2014

கன்னியாகுமரி டு கல்யாணம் (கடுகல்) பகுதி 39-42

கடுகல் பகுதி39

நாள்: ஜூலை 16;              நேரம்: மதியம் 2.00 மணி

காலைல எழுந்திருச்சு சாமீக்கு கால் பண்ணினப்போ செகண்ட் லைன்ல போச்சு. சரி பேசி முடிச்சிட்டு வருவான்னு எனக்கு கால் பண்ணுவான்னு காலேஜ்கு கிளம்பி போய்ட்டேன். மதியம் வரைக்கும் ஃபோன் வரல, சரின்னு நான் மறுபடியும் 2 மணிக்கு கால் பண்ணினேன்.

ஆனந்த்:
ஹாய், என்ன படு பிஸியா?
சாமீ:
அப்படில்லாம் இல்லடா...
ஆனந்த்:
காலேல கால் பண்ணேன். செகண்ட் லைன்ல போச்சு. அதுக்கப்பறம் ஆளையே காணோம்.
சாமீ:
இல்லடா... ஜெனி கிட்ட பேசிட்டு இருந்தேன்டா.
ஆனந்த்:
ஓ... ஆரம்பிச்சாச்சா? எப்போல இருந்து? என்ன சொன்னாங்க...
சாமீ:
காலைல தான் ஒரு 8.30’கு  சும்மா ஃபோன் பண்ணினேன்.  நாங்க வந்து சேர்ந்துட்டோம்னு சொன்னேன். என்னோட நம்பர், பொண்ணு பார்க்க போறதுக்கு முன்னாடியே அவங்க வீட்ல குடுத்திட்டாங்களாம். இவ்ளோ நாள் ஏன் ஃபோன் பண்ணலன்னு கேட்டேன். பசங்க தான் ஃபர்ஸ்ட் ஃபோன் பண்ணனும். பொண்ணுங்க எப்படி பண்ண முடியும்னு சொல்லுச்சு. நேத்து நைட்டே ஃபோன் பண்ணுவேன்னு வெயிட் பண்ணுச்சாம்... அப்பறம் அவங்க வீட்ல எல்லோர்கிட்டயும் பேசிட்டு இருந்தேன். பேசி முடிக்க 11 மணி ஆகிடுச்சு. அப்பறம் குளிச்சி கிளம்பி 12 மணிக்கு தான் ஆபீஸ் வந்தேன்.
ஆனந்த்:
ம்ம்ம்... சார்’கு கல்யாணம்... இனிமே ஸார, நினைச்சப்போலாம் பார்க்க முடியாது...
சாமீ:
ஆமாம்... இனிமே நாங்கலாம் பிஸி...
ஆனந்த்:
இனிமே நீ எனக்கு மட்டும் சொந்தம் கிடையாதுல...
சாமீ:
ஆமாம். இனிமே நான் உனக்கு 5% தான் சொந்தம். அது கூட அன்அஃப்பிசியல்லா (unofficial) தான்.
ஆனந்த்:
ம்ம்ம்...
சாமீ:
சரிடா... நான் அப்பறம் பேசுறேன்... ஆபீஸ்ல கொஞ்சம் வேலை கிடக்கு...
ஆனந்த்:
ம்ம்ம்... சரிடா... பை... பை...


கடுகல் பகுதி40

நாள்: ஜூலை 16;              நேரம்: மாலை 5.00 மணி

“இனிமே நீ எனக்கு மட்டும் சொந்தம் கிடையாதுல...” அப்படின்னு நான் அவன்கிட்ட கேட்டதே, “என்னிக்கும் நான் உனக்கு தாண்டா”னு சொல்லுவான்கிற முட்டாள்தனமான நெனப்புல தான். ஆனா, அவன் சொன்ன அந்த எதிர்பார்க்காத வார்த்தைகள்ல நான் ரொம்பவே மனசொடிஞ்சு போனேன். ஏற்கனவே அவன் என்கிட்ட நிச்சயதார்த்தத்த மறைச்சது, இப்போ நடந்தது, எல்லாம் சேர்ந்து என்னை அழத்தான் வச்சது... நிச்சயமா இதை அவன்கிட்ட கேட்டே ஆகணும்னு முடிவு பண்ணி 5 மணிக்கு மேல அவனுக்கு கால் பண்ணேன்.
சாமீ:
சொல்லுடா...
ஆனந்த்:
சாப்டாச்சா?
சாமீ:
ம்ம்ம்... சாப்டேண்டா...
ஆனந்த்:
என்ன சாப்ட?
சாமீ:
இன்னிக்கு என்னாது... ஞாபகம் வந்திருச்சு... லெமன் சாதம்... காரட் பொறியல், முட்டை வதக்கல்,
ஆனந்த்:
ம்ம்ம்... நான் உன்கிட்ட ஒண்ணு பேசணும்...
சாமீ:
சொல்லு...
ஆனந்த்:
மதியம் பேசும் போது unofficial’லா 5% தான் சொந்தம்னு சொன்ன... ஆனா இவ்ளோ நாள் அப்படி சொல்லலியே... அது ஏன் சாமீ...
சாமீ:
நான் சொன்னதுல என்ன தப்பு... பிரக்டிகல்லா  (practical) இருடா...
ஆனந்த்:
அப்போ இவ்ளோ நாள், நான் உனக்கு மட்டும் தான் சொந்தம்னு சொன்னியே, அப்போ அந்த so called practical எங்க போச்சி சாமீ...
சாமீ:
கிறுக்கு தனமா உளராத... நீ நல்ல்லா தானே படிச்சிருக்க... எப்படித்தான் இந்த படிச்சவனுங்கல்லாம் அடி முட்டாள்லா இருக்கீங்களோ...
ஆனந்த்:
ஆமாம்டா நான் முட்டாள் தான்... உன்னை போய் லவ் பன்னனேன் பாரு.... நான் முட்டாள் தான்...
சாமீ:
உன்னைய நானா லவ் பண்ண சொன்னேன்...
ஆனந்த்:
அப்ப நீ சொல்லவே இல்ல...
சாமீ:
நான் எப்ப சொன்னேன்...
ஆனந்த்:
அன்னிக்கு பைக்ல என்ன கூட்டிட்டு போகும் போகுது யாரு சொன்னா, என் கூட இது மாதிரி, கடைசி வரைக்கும் கூட இருப்பியா’னு யாரு கேட்டது...
சாமீ:
(நக்கல் சிரிப்புடன்) யார்ரது? நானா சொன்னேன்... சீ சீ நானெல்லாம் அப்படி சொல்லல...
ஆனந்த்:
ஆமா ஆமா நீ சொல்லல தான்...
சாமீ:
எப்பவும் அது மாதிரியெல்லாம் இருக்க முடியாதுடா...  உனக்கு உங்க அம்மா உன் தங்கச்சி இருக்காங்க... இனிமே அவங்கள பார்த்துக்கோ...
ஆனந்த்:
அவங்கள பார்த்துக்க எனக்கு தெரியும் சாமீ... அப்போ இவ்ளோ நாள், என்கிட்ட இருந்து உனக்கு வேணும்கிறதெல்லாம் வாங்கும் போது அவங்க காணாமப் போயிருந்தாங்களா  சாமீ...
சாமீ:
நானா கேட்டேன்... நீ தான கொடுத்த...
ஆனந்த்:
அப்போ எல்லாத்தையும் நானா கொடுத்தேன். நீ இதுவரைக்கும் எதுவுமே கேட்டதே இல்ல...
சாமீ:
அய்ய, உன்கிட்டேல்லாம் பேச  முடியாது... இப்ப உனக்கு என்ன வேணும்...
ஆனந்த்:
அது ஏன்னு தெரியனும்...
சாமீ:
எது?
ஆனந்த்:
எதுன்னு உனக்கு தெரியாது...
சாமீ:
தெரியாது... எனக்கு வேலை இருக்கு... உனக்கு வேலை இல்ல... அதனால ஃபோன வச்சிட்டு போறேன்...
அவன் ஃபோன கட் பண்ணிட்டு போய்ட்டான்... எனக்கு அவன் பேசின ஒவ்வொரு வார்த்தையும் ரணகொடூரமா இருந்தது... ஆனா, அவன் சொன்ன வார்த்தைகளோட வலியோ வேதனையோ அவனுக்கு புரியல... 



கடுகல் பகுதி41

நாள்: ஜூலை 16;              நேரம்: இரவு 8.30 மணி

     சாமீகிட்ட இருந்து எனக்கு ஃபோன் கால் வந்தது. அதை அட்டென்ட் பண்ணவா வேண்டாமா அப்பிடின்னு ஒருவித தயக்கம். என்ன சொன்னாலும் பரவாலன்னு ஃபோன அட்டென்ட் பண்ணேன்.
சாமீ:
என்ன பண்ற?
ஆனந்த்:
ஒண்ணும் பண்ணல...
சாமீ:
அம்மாகிட்ட பேசிட்டியா?
ஆனந்த்:
பேசிட்டேன்...
சாமீ:
என்ன சொன்னாங்க?
ஆனந்த்:
ஒண்ணும் சொல்லல...
சாமீ:
என்னென்னே தெரியல, எனக்கு ஒரே தலைவலி மதியத்துல இருந்து...
ஆனந்த்:
தெரியுமே!!! உனக்கு தலைவலி வந்திருக்கும்னு... வாராட்டி தானே ஆச்சர்யம்...
சாமீ:
ஏய், இல்லடா... நிஜமாவே தலைவலிக்குது... அதெல்லாம் இப்ப பேசாத... அத அப்படியே விட்டுடு... ப்ளீஸ் டா... பேசி என்ன சாதிக்க போற?
ஆனந்த்:
ஓகே...
சாமீ:
குட் நைட்...
ஆனந்த்:
குட் நைட்...
சாமீ:
ஸ்வீட் டிரீம்ஸ்...
ஆனந்த்:
ஸ்வீட் டிரீம்ஸ்...
சாமீ:
ஐ லவ்வ் யூ டா...
ஆனந்த்:
(மிகப் பெரிய மௌனம் மட்டும் தான் என்னோட பதில். ஏன்னா, நான் அவ்ளோ ஹர்ட்டாகி இருந்தேன்)
சாமீ:
சொல்ல மாட்டியா? ஏய் முட்டகண்(ண்)ணு...  சொல்லலேனா போ... நான் மறுபடியும் சொல்றேன்... ஐ லவ் யூ.... ஐ லவ் யூ.... ஐ லவ் யூ முட்டகண்ணு... பை பை...
     சாமீ, எப்பவுமே இப்படித்தான்... நிறைய தேவை இல்லாம பேசிடுவான்... ஆனா, நான் அதை பத்தி கேள்வி கேக்க கூடாது... அப்படி பேசினாலும், எந்த ரிப்ளையும் வராது... இருந்தும் எனக்கு கேக்கணும்னு தோணும், கேட்டிடுவேன்... அப்படி ஒண்ணு நடந்ததாவே காட்டிக்க மாட்டான். ஆனா, என்னால தான் எதையும் மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது...
எனக்கு அவன் பேசி முடிச்சதும் சிரிப்பு தான் வந்தது... என்னை அவன் எப்பவாவது, டீஸ் பண்ணனும்னு நினைச்சா, என்னை முட்டகண்(ண்)ணு அப்படின்னு தான் கூப்பிடுவான்... ஏன்னா எனக்கு கண்ணு கொஞ்சம் பெருசு... அவன் கடைசியா சொன்ன அந்த மூணு வார்த்தை தான் என்ன கொஞ்சம் பழைய மனநிலைக்கு மாத்துச்சு...

கடுகல் பகுதி42

அடுத்த மூணு நாளுமே, நான் கொஞ்சம் கோபத்தோட இருக்கிற மாதிரியே காட்டிக்கிட்டேன்... அவனும் தினமும் எனக்கு அதிக பட்சம் நைட் 9 மணிக்கு முன்னாடியே ஃபோன் பண்ணிட்டு வச்சிட்டான்... என் மரமண்டைக்கு எதுவுமே தப்பா தோணல... 

நாள்: ஜூலை 2௦;        நேரம்: காலை 8.30 மணி

     காலைல எழுந்திருக்கும் போதே அவன பார்க்கணும் போல இருந்தது. அதனால, காலேஜ் வேலைய சாக்கா வச்சி, அவங்க வீட்டுக்கு போனேன். அவன் உள்ரூம்ல தூங்கிட்டு இருக்கான்னு அம்மா சொன்னாங்க... அங்க போய் பார்த்தேன். அவன் நல்லா தூங்கிட்டு இருந்தான்... அவனை எழுப்ப மனசு வர்ல... அங்க கிடந்த அவன் மொபைல எடுத்து சும்மா நோண்டினேன். வழக்கம் போல இன்பாக்ஸ் ஓபன் பண்ணினேன்... அதுல ஒரு நாலஞ்சு ஓபன் பண்ணாத மெசேஜ் இருந்தது. அந்த மெசேஜ் அனுப்பின பேர பார்த்தேன். “A My wife” அப்படின்னு இருந்தது. இது ஜெனி அனுப்பின மெசேஜ்னு புரிஞ்சது. சேவ்டு ஐட்டம்ஸ்ல (saved items) நூறுக்கும் மேல ஜெனி அனுப்பின மெசேஜ் இருந்தது. சரின்னு, சென்ட் ஐட்டம்ஸ் (sent items) பார்த்தேன். அங்க ஒண்ணுமே இல்ல. மெசேஜ் செட்டிங்க்ஸ் (message settings) செக் (check) பண்ணிப் பார்த்தேன். அதுல சேவ் சென்ட் ஐட்டம்ஸ்ல (save sent items) “நோ ஆப்ஷன் (No option) கிளிக் செய்ய பட்டிருந்தது. கால் லாஃக் பார்த்தேன். ஜெனிகிட்ட, ஒவ்வொரு நாளும் நைட் 9 மணில இருந்து 3 மணி வரைக்கும் பேசிருக்கான்னு புரிஞ்சது. தலைவலிக்கிதுன்னு சொன்னதெல்லாம் பொய்’னு புரிஞ்சது. திடீர்னு முழிச்ச சாமீ, என் கைல இருந்த மொபைல்ல பார்த்தவுடனே, ரொம்ப டென்ஷனாகி என்கிட்டயிருந்து மொபைல்ல பறிச்சான்.
சாமீ:
யாரு கேட்டு எடுத்த... கொஞ்சம் கூட மேன்னர்ஸ் இல்லையா உனக்கு...
ஆனந்த்:
நான் உன்னோட மொபைல்ல எடுக்க கூடாதா?
சாமீ:
எடுக்க கூடாது... இது என்னோட பர்சனல்...
ஆனந்த்:
சரி.... இனிமே எடுக்கல...
     நான் ஏன் வந்தேன்னு கூட அவன் கேக்கல... மொபைல்ல புடுங்கிட்டு திரும்பி படுத்துட்டான்... நான் அவங்க அம்மாகிட்ட சொல்லிட்டு காலேஜ்கு கிளம்பிட்டேன்... அவன பார்த்து அவன்கிட்ட ஜாலியா பேசணும்னு போனேன். ஆனா, அங்க ஏண்டா போனோம்னு ஆகிடுச்சு... எனக்கு அழுகை தான் வந்தது. நான் ஹெல்மெட் போட்டிருந்ததால ரோட்ல யாருக்கும் தெரியாது. நான் அவன இழந்திட்டேன்னு புரிஞ்சது... 


4 comments:

  1. ஒரு விஷயம் தெளிவுபடுத்துங்க... நிச்சயத்துக்கு முன்ன சாமீ பினாத்தின பினாத்தல்களையெல்லாம்.. அப்படியே அலேக்கா தூக்கி ஒரு ஓரமா வச்சிருவோம்.. சகல காரியமும் ஆனந்தின் முன்னிலைல தான் நடக்குது... (எதப்பத்தியும் சாமீ முன்னவே சொல்லலைன்ற்தென்னவோ உண்மை தான்).. நிலைமை கைய மீறி போனப்பவும்.. ஃபோன போட்டு.... ”இனிமே நீ எனக்கு மட்டும் சொந்தம் கிடையாதுல்ல” ன்னு ஊர்ஜிதம் பண்ணிக்குவானேன்????

    ஒருவேள... அதான்... மனைவி, துணைவி எல்லாம் தமிழ் கூறு நல்லுலகுல சகஜமாச்சே... அப்படி ஒரு பதவி கிடைக்கும்னு ஆனந்த்துக்கு தோணுச்சா???

    இத நக்கல் நையாண்டிக்குக் கேக்கல... am damn serious... மத்தபடி... ஆனந்தின் மனநிலை அப்போ எப்படி இருந்திருக்கும்னு புரிஞ்சிக்க முடியுது...!

    ReplyDelete
    Replies
    1. ரோத்தீஸ் அண்ணா,
      அன்னைக்கு நான் இருந்த மனநிலை தான் காரணம். அவன் இல்லாத வாழ்க்கைய என்னால அப்போ நினைச்சு கூட பார்க்க முடியல... அவன் மேல நான் வச்சிருந்த கண்மூடித்தனமான காதல் தான் காரணம்... அந்த உறவு, என்னவா வேணா இருந்திட்டுப்போகுது... ஆனா எனக்கு அவன் வேணும். அவன் மட்டும் தான் வேணும்னு இருந்தேன்... அது தப்பா சரியானு எல்லாம் என்னால யோசிக்க கூட முடியல...

      Delete
  2. என்னத்த சொல்றது...!
    இப்டி நடுராத்திரியில் புலம்ப வச்சுடிங்க.... எனக்கு இப்போ எழற சந்தேகம் வேறவிதமானது... சாமி மேல உங்களுக்கு இருக்கிறது காதல் இல்லை, அதை மீறிய வேறொன்றோன்னு தோணுது.... அதுக்கு பேர் என்னனு சொல்ல தெரியல... ஆனால், காதலில் இருப்பது நம்பிக்கை... சாமி மேல உங்களுக்கு இருக்கிறது மூடநம்பிக்கையோன்னு தோணுது.... இன்னும் பல சோகங்களை பகிர இருக்கிங்கன்னு தெரியும்... அவற்றை படிக்குறப்போ, அனேகமா உங்கள திட்டுனாலும் தவறா எடுத்துக்காதிங்க....

    ReplyDelete
  3. கண்டிப்பா தவறா எடுத்துக்க மாட்டேன் ஜி... நீங்களாவது திட்டுவேன்னு தான் சொன்னீங்க... ஒருத்தர் ஃபிளைட்ல டிக்கெட் போட்டு வந்து அடிப்பாறோன்னு பயமா இருக்கு...

    ReplyDelete