கடுகல் பகுதி -17
என்னோட மொபைல்ல இருந்து “காலையில்
தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா” அப்படின்னு கேட்டது.
சாமீ:
|
டேய் உன்னோட
மொபைல் அடிக்கிது பாரு
|
ஆனந்த்:
|
சொல்லுங்கமா
|
என்னோட அம்மா:
|
தம்பி, இவா ரொம்ப பசிக்குதுன்னு என் உயிரை
எடுக்குறா, நீ கூட்டிட்டு போயி எதாவது வாங்கிகொடுப்பா,,,
|
ஆனந்த்:
|
போங்கம்மா... எனக்கு
ரொம்ப டையர்டா இருக்கு. வேணும்னா ஒரு அரமண் நேரம் கழிச்சி கூட்டிட்டு
போறேன்மா... ப்ளீஸ் மா...
|
என்னோட அம்மா:
|
சரிடா தம்பு குட்டி. (பின்குரல்: ஒரு குரங்க கொஞ்சுறத பாரு)
|
ஆனந்த்:
|
ஓகே... பை பை மம்மி
குட்டி...
|
என்னோட அம்மா என்னை சந்தோஷமா
இருக்கும் போது எப்பவுமே தம்பி, தம்பு, தம்பு குட்டி-னு தான் கூப்பிடுவாங்க.
நானும் எங்க அம்மாவ மம்மி குட்டி-னு தான் சொல்லுவேன். எங்க அம்மா என்னை தம்பி-னு
சொல்றதால சில பல காமெடிலாம் நடந்திருக்கு. ஒரு சின்ன சம்பவம்: நான் நையந்த்
ஸ்டாண்டர்ட் படிக்கும் எங்க அம்மா ஒரு மேக்ஸ் டீச்சர்கிட்ட “நீ நையந்த்க்கு மேக்ஸ்
டியூசன் எடுப்பியாப்பா? நான் தம்பிய அனுப்பி வைக்கிறேன்”னு கேட்டிருக்காங்க.
அவங்களும் அனுப்பி வைக்க சொல்லிட்டு ரொம்ப குழம்பிருக்காங்க. என்ன குழப்பம்னா
இவ்ளோ வயசானவங்களுக்கு நையந்த் படிக்கிற தம்பியான்னு!!! ஏன்னா அவங்களுக்கு என்
தங்கச்சிய பத்தி தெரியும், ஆனா என்னை பத்தி தெரியாது. அப்பறம் ஒரு வாரம்
குழப்பிட்டு, அந்த மிஸ் என்கிட்ட நேராவே கேட்டுட்டாங்க...
கடுகல் பகுதி -18
சாமீ:
|
அம்மா என்ன
சொன்னாங்க?
|
ஆனந்த்:
|
ஒண்ணுமில்லை... எங்க
வீட்டு பிசாசு குட்டிக்கு பசிக்கிதாம். அதான் ஏதாவது வாங்கி கொடுக்க
சொன்னாங்க... நான் அரமண் நேரம் கழிச்சி வர்றேன்னு சொல்லிருக்கேன். அவ்ளோ தான்...
|
சாமீ:
|
கிளம்புவோம்டா...
|
ஆனந்த்:
|
அதெல்லாம்
ஒன்னும் வேண்டாம். நான் அம்மா கிட்ட சொல்லிட்டேன்... சோ ஒன்னும் ப்ராப்ளம்
இல்ல... நாம நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறமா கிளம்பலாம்.
|
சாமீ:
|
ரெஸ்ட்டு...
நாம...
|
ஆனந்த்:
|
ம்ம்ம்... (மெதுவான
குரலில்) ரெஸ்ட் எடுக்க ஆரம்பிப்போமா... நான் அவன கட்டி பிடிச்சேன்.
|
சாமீ:
|
கொஞ்ச நேரம்
சும்மா இருடா... (வாய் மட்டும் தான் அப்படி சொல்லுச்சு. வழக்கம் போல
இருக்கமா கட்டிபிடிச்சிக்கிட்டான். நானும் இருக்கமா கட்டிப்பிடிச்சிக்கிட்டேன்.)
|
ஆனந்த்:
|
ஏன் சாமீ, நாம
வாழ்க்கை முழுக்க இப்படியே இருக்க முடியுமா?
|
சாமீ:
|
சீ... இதென்ன
கேள்வி... நான் உனக்கு மட்டும் தான்...
|
இந்த கேள்விய நான்
அவன்கிட்ட கேக்குறது ஒன்னும் புதுசு இல்ல. பல முறை இதே கேள்விய கேட்ருக்கேன். அதனால தான் அந்த
“சீ”. “நான் உனக்கு மட்டும் தான்”னு சொல்றதோட எப்பவும் இன்னோனும் சேர்த்து
சொல்வான். அது என்னன்னா “எனக்கு
கல்யாணம்னு ஒண்ணு ஆனாக்கூட நீ தான் எனக்கு ஃபர்ஸ்ட். நீ கூட என்னை விட்டுட்டு
இருக்கலாம். ஆனா நிச்சயமா என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியாது. அத
புரிஞ்சிக்கோ”. இந்த வார்த்தைகள என்னால
என்னிக்கும் மறக்கவே முடியாது... வழக்கம் போல, காமக்கூடலில் என்னவெல்லாம் நடக்குமோ
அது எல்லாம் நடந்தது... எங்களோட வீட்லயோ இல்ல சாமீயோட வீட்லயோ நடக்கிற கூடலுக்கும்
நேத்து எங்க அம்மா வீட்ல நடந்ததுக்கும் இப்போ இந்த ஹோட்டல்ல நடக்கிறதுக்கும் நிறைய
வித்தியாசம். அதுக்கு முக்கிய காரணம் எங்களோட வீட்லயும் சாமீயோட வீட்லயும்
டவுன்லோட் பண்ணி வச்சிருக்கிர கேய்ய் பார்ன் மூவீஸ்ஸ லேப்டாப்ல பார்த்திட்டே
செய்வோம். அதுனால, ஒரு கம்ப்ளீட் ஸடிஸ்ஃபேக்ஸன் இருக்காது. இதுக்கு முன்னாடி
நானும் சாமீயும் குற்றாலம், கன்னியாகுமரி, ஊட்டி, மூணாறு இங்கெல்லாம் டூர்
போயிருக்கோம். ஆனா அங்க பிரசாத்தோட தொல்லை அதிகமாவே இருக்கும். இங்க லேப்டாப்
இல்லாததும் பிரசாத் இல்லாததும் தான் இந்த கம்ப்ளீட் ஸடிஸ்ஃபேக்ஸன்கு காரணம். எங்களோட
வீடுன்னு சொல்றது நான் தனியா தங்கியிருக்கிற வீட்ட தான். ஏன்னா என்ன பொறுத்த வரை
அந்த வீடு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ற வீடு தான். ஒரு மூணு மாசத்துக்கு
முன்னாடி வரைக்கும் அந்த வீட்டோட கீ என்கிட்ட ஒண்ணு இருக்கிற மாதிரி அவன்கிட்டயும்
இருந்தது. அவன் தொலைச்சதுக்கப்புறம் வேற ஸ்பேர் கீ இல்லாததால இது வரைக்கும் கொடுக்கல.
கடுகல் பகுதி -19
எல்லாம் சுபமா
முடிஞ்சதும் எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்பிட போனோம். ஹோட்டல்ல எதையும் சாப்பிட
சொல்லி நான் சாமீய கம்பெல் பண்ணல. அவனுக்கு என்ன பிடிச்சிருந்ததோ அத மட்டும்
வாங்கிக் கொடுத்தேன். டின்னர் முடிச்சதும் என் தங்கச்சி “மீன் சாப்பிடனும்”னு
சொன்னா... சரி’னு மீன் பொறிச்சி விக்கிற கடைக்கு கூட்டிட்டு போனேன். சாமீ மட்டும்
ஒரு பத்தடி தூரத்துலயே நின்னு கிட்டான். நான் வேணும்னே கடைக்குள்ள இருந்துகிட்டு மீன
எடுத்து காட்றதும், அவன் உடனே வாந்தி எடுக்கிற மாதிரி ஆக்சன் பண்ணிட்டு இருந்தான்.
நாங்க மூணு பேரு மட்டும் நல்லா மூக்கு பிடிக்க தின்னுட்டு வந்தோம். பாவம் சாமீ. எங்க
மூணு பேருக்காக ரோட்ல தவமிருந்தான். அப்பறம் அம்மாவையும் தங்கச்சியவும் அனுப்பி
வச்சிட்டு நானும் சாமியும் கடற்கரைக்கு போனோம். கடற்கரைல கொஞ்ச நேரம் சும்மா
சுத்திட்டு அங்க இருந்த கடைகளையும் சுத்திட்டு ரூம்க்கு வந்தோம்.
சாமீ:
|
நான்
வீட்டுக்கு ஃபோன் பேசுறேன்டா.
|
ஆனந்த்:
|
சரிடா. நான் போய்
அம்மாகிட்ட விக்ஸ் வாங்கிட்டு வர்றேன்.
|
சாமீ:
|
ம்ம்ம்...
|
விக்ஸ் வாங்கிட்டு
வந்தேன். சாமீ வெளிய சும்மா நின்னுட்டு இருந்தான்.
ஆனந்த்:
|
நாளைக்கு காலைல சன் ரைஸ் பார்க்க போலாமான்னு அம்மா கேட்டாங்க...
|
சாமீ:
|
எத்தன
மணிக்கு?
|
ஆனந்த்:
|
அஞ்சு மணிக்கு...
எந்திருச்சிருவியா?
|
சாமீ:
|
இங்க
வரைக்கும் வந்துட்டு சன் ரைஸ் பார்க்காம போனா எப்படிடா... போலாம்டா...
|
ஆனந்த்:
|
ம்ம்ம்... சரி... நான்
அம்மாகிட்ட சொல்லிடுறேன். அலாரமும் வச்சிடுரேன்.
|
சாமீ:
|
ஓகே டா...
|
நான் போய் அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தேன்.
|
|
ஆனந்த்:
|
அங்க காத்தே வர்லடா... கொஞ்ச நேரம் வெளியவே இருக்கேன். நீ
தூங்குடா...
|
சாமீ:
|
சரி குட் நைட்...
|
ஆனந்த்:
|
குட் நைட்...
|
முக்கடல் சங்கமத்தில் உங்கள் கூடலும் சங்கமம் ஆன பகுதி... குறைவாக இருந்தாலும், காதல் காட்சிகள் நிறைவாகவே இருந்தது... இனிதான் ஆட்டம் ஆரம்பமென நினைக்கிறேன்.... இனி மனதை திடப்படுத்திக்கொள்ள ஆயத்தமாகுறோம்...
ReplyDeleteநன்றி திரு. விஜய் விக்கி. காலம் கடந்த பதிலளிப்பிற்கு மன்னிக்கவும். இனி வரும் பகுதிகளை எழுதும் போது, நானும் என் மனதினை திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.
Deleteஎன்ன தான் அலார்ம் வச்சி படுத்திருந்தாலும்.. விடிய விடிய பெரிய முள்ளும், சின்ன முள்ளும் ஓடிப்பிடிச்சி விளையாண்டிருக்குமே... ரொம்ப அசதியாயிருக்கணுமே... சன்ரைஸ் பாத்தீங்களா இல்லையா??
ReplyDeleteநன்றி திரு. ரோத்தீஸ் அண்ணா...
Deleteஹா... ஹா... ஹா... அண்ணா, அந்த விளையாட்டு விடிய விடிய நடக்கவில்லை... விடிகாலையில் தான் நடந்தது... சன் ரைஸ் பார்க்கவே இல்லணா...